தேசிய விருதுகள் அறிவிப்பு.. சிறந்த படம் என்ன? சிறந்த இயக்குநர் யார்?

டெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குஜராத்தி மொழியில் வெளியான ஹெல்லாரோ படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லி சாஸ்திரி பவனில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இன்று மாலை மூன்று மணிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கவுள்ளார்.

சிறந்த இயக்குர்

சிறந்த இயக்குர்

அதன்படி சிறந்த படத்திற்கான தேசிய விருது குஜராத்தி மொழியில் வெளியான ஹெல்லாரோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக உரி படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

சிறந்த நடிகையாக நடிகை கீர்த்தி சுரேஷின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியில் அனந்ததூன் படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானாவும் உரி படத்தில் நடித்த விக்கி கவுஷலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த அறிமுக இயக்குநர்

சிறந்த அறிமுக இயக்குநர்

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது நாள் படத்தின் இயக்குநர் சுதா ரெட்டி எக்கன்ட்டிக்கு வழங்கப்படுகிறது. சமூக சிக்கல்களை சொல்லும் சிறந்த படமாக பத்மன் படம் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை நடிகை

துணை நடிகை

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சும்பக் படத்தில் நடித்த ஸ்வனந்த் கிர்கிரேவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது, பத்தாய் ஹோ படத்திற்காக சுரேக்கா சிக்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு கன்னட படமான ஒன்டல்ல இரடல்ல படத்தில் நடித்த பிவி ரோஹித்,
ஹர்ஜிதா என்ற பஞ்சாபி படத்தில் நடித்த சமீப சிங், உருது படமான ஹமீதில் நடித்த தல்ஹா அர்ஷத் ரேஷி மற்றும் மராத்தி படமான நாளில் நடித்த ஸ்ரீனிவாஸ் பொக்கலே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

66th National awards: Gujarati film Hellaro gets the best film award

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X