National Awards: அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிய கன்னட படம்

By Siva

சென்னை: யுரி தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படம் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. நத்திசராமி என்கிற கன்னட படம் அதிகபட்சமாக 5 விருதுகளை பெற்றுள்ளது.

66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே தேசிய விருது கிடைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களுக்கோ, நடிகர், நடிகைகளுக்கோ விருது எதுவும் கிடைக்கவில்லை.

66th national awards: Nathicharami, Uri emerge winner

யுரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது.

யுரி படத்திற்கு சிறந்த சவுண்டு டிசைன், சிறந்த பிஜிஎம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த இயக்கத்திற்கான விருதை யுரி இயக்குநர் ஆத்தியா தர் பெறுகிறார். சிறந்த நடிகருக்கான விருது யுரி பட ஹீரோ விக்கி கவுஷலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை விக்கி கவுஷலுடன் சேர்ந்து அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆயுஷ்மான் குரானாவும் பெறுகிறார்.

யுரியை அடுத்து அந்தாதுன், பத்மாவத் மற்றும் மகாநதி ஆகிய படங்களுக்கு தலா 3 விருதுகள் கிடைத்துள்ளன. மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த தெலுங்கு படம், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் ஆகிய பிரிவுகளிலும் மகாநதிக்கு விருது கிடைத்துள்ளது.

66th national awards: Nathicharami, Uri emerge winner

யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். படத்திற்கு சிறந்த ஆக்ஷன், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. கன்னட திரையுலகினராலும் பிரமாண்ட படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்த படம் ஜே.ஜி.எஃப்.. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

66th national awards: Nathicharami, Uri emerge winner

நத்திசராமி என்கிற கன்னட படம் தான் அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த பாடகி, பாடல், எடிட்டிங், சிறந்த கன்னட படம், நத்திசராமி நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஸ்பெஷல் மென்ஷன் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது அந்த படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X