66வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த இந்தி படமாக அந்தாதூன் தேர்வு!
டெல்லி: சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பாரம் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. டெல்லி சாஸ்திரி பவனில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இயக்குநர் ராகுல் ரவாய்ல் தலையிலான குழுவினர் தேசிய விருதுகளை அறிவித்தனர். அதன்படி சிறந்த மராத்தி படமாக போங்கா தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இந்தி படமாக அந்ததுண் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருது ஏக் ஜெ சிலோ ராஜா அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக பாரம் படம் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளத.
சிறந்த நடனத்திற்கான தேசிய விருது பத்மாவதி படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சண்டை, ஸ்பேஷல் எஃபெட்ஸ் இயக்கத்திற்காக கேஜிஎஃப் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











