67 வது தேசிய திரைப்பட விருதுகள் : விருதுகளை பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் !

டெல்லி : டெல்லியில் இன்று 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ் நட்சத்திரங்களான தனுஷ் , விஜய்சேதிபதி, பார்த்திபன், வெற்றி மாறன் , டி இமான், நாக விஷால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

67வது தேசிய விருது வழங்கும் விழா

67வது தேசிய விருது வழங்கும் விழா

2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 67வது தேசிய விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அசுரன் சிறந்த படம்

அசுரன் சிறந்த படம்

அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் அசத்தி இருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ்க்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சூப்பர் டீலக்ஸ் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

Recommended Video

Superstar Rajinikanth Getting 51st DadaSaheb Phalke Award | 67th NATIONAL FILM AWARDS
சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.

தாதா சாஹேப் பால்கே

தாதா சாஹேப் பால்கே

மேலும் இந்த விருது வழங்கும் விழாவில், கலைத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X