»   »  தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்

தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த துணை நடிகர், சிறந்த பாடலாசிரியர் உள்பட ஏழு பிரிவுகளில் இந்த விருதுகளைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா.

சிறந்த பிராந்திய மொழிப் படம்

சிறந்த பிராந்திய மொழிப் படம்

சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்கான விருது பிரம்மன் இயக்கிய குற்றம் கடிதல் படத்துக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகள் படம்

சிறந்த குழந்தைகள் படம்

சிறந்த குழந்தைகள் படம் என்ற பிரிவில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவான ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடலாசிரியர்

சிறந்த பாடலாசிரியர்

சைவம் படத்தில் ஜிவி பிரகாஷ்ராஜ் இசையில் இடம்பெற்ற அழகே அழகு பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருது நா முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இரண்டாவது முறையாக அவர் பெறுகிறார்.

சிறந்த பாடகி

சிறந்த பாடகி

இந்தப் பாடலைப் பாடிய உத்ரா உண்ணிகிருஷ்ணன் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதினைப் பெறுகிறார்.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்

காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ்-விக்னேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த எடிட்டர்

சிறந்த எடிட்டர்

தேசிய அளவில் சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)-னுக்குக் கிடைத்துள்ளது.

English summary
Tamil cinema has won 7 awards in various categories in the 62nd National Awards.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil