National Awards 2024: மணி சாருக்கு நான் கை தட்டுறேன்.. தேசிய விருதுகள் விழாவில் குஷ்பு வெறித்தனம்!
புதுடெல்லி: இயக்குநர் மணி ரத்னம் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர். இவரது இயக்கத்தில் ஒரு படம் வருகின்றது என்றால், இவரது ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இவர் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியபோது இவருடன் படங்களை இயக்கிக் கொண்டு இருந்த இயக்குநர்கள் பலரும் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், மணி ரத்னம் இன்னும் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே உள்ளார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் தேசிய விருதினைப் பெறும்போது, நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும், ''எங்க மணி சாருக்கு நான் தட்டுறேன் டா என குஷ்பு தேசிய விருது வழங்கும் விழாவில் சம்பவம் செய்துள்ளார்'' என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு சிறந்த தமிழ்படம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் மணி ரத்னம் பெற்றுக்கொண்டார். அப்போது நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மைய்யமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனமும் மணி ரதனத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்தார். இந்தப் படம்தான் இதுவரை தமிழில் உருவான படங்களிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். இந்தப் பட்த்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமுமே திரண்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கியுள்ளது. .
நான்கு விருதுகள்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கும் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த இசை வடிவமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அளிக்கப்படுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு இசை வடிவமைத்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் சிறந்த படத்திற்கான விருதினை பொன்னியின் செல்வனுக்காக பெற்றுக்கொண்டார். படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.
மணி ரத்னம்: இயக்குநர் மணி ரத்னம் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர். இவரது இயக்கத்தில் ஒரு படம் வருகின்றது என்றால், இவரது ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இவர் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியபோது இவருடன் படங்களை இயக்கிக் கொண்டு இருந்த இயக்குநர்கள் பலரும் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், மணி ரத்னம் இன்னும் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே உள்ளார்.
குஷ்பு: இந்நிலையில் இவரது இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செலவன் பாகம் 1 படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அவர் தேசிய விருதினைப் பெறும்போது, நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் பலரோ, ' எங்க மணி சாருக்கு நான் தட்டுறேன் டா என குஷ்பு தேசிய விருது வழங்கும் விழாவில் சம்பவம் செய்துள்ளார்' என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











