93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா துவங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸ் : திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த விருதுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே வழங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காலமாக இந்த ஆண்டு 2 மாதங்கள் தாமதமாக நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ரெட் கார்பெட் நிகழ்வுடன் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கி உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, இவ்விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விழா நடைபெறுகிறது.

துவங்கியது விழா

துவங்கியது விழா

93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 ம் தேதி இரவு 8 மணிக்கும், இந்திய நேரப்படி ஏப்ரல் 26 ம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கி உள்ளது. தொடர்ந்து 3 மணி நேரம் இவ்விழா நடைபெற உள்ளது. 30 பிரிவுகளின் கீழ் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்காக The Father, Judas and the Black Messiah, Mank, Minari, Nomadland, Promising Young Woman, Sound of Metal, The Trial of the Chicago 7 ஆகிய படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிறந்த நடிகர், நடிகைகள் பரிந்துரை

சிறந்த நடிகர், நடிகைகள் பரிந்துரை

சிறந்த நடிகர் பிரிவில் ரிஸ் அகமது, ஸ்டீவன் யான், கேரி ஓல்ட்மேன், மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன், சர் ஆன்டனி ஹாப்கின்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைக்கான விருதிற்காக வியோலா டேவிஸ், பிரான்சிஸ் மெக்டார்மென்ட், வெனிசா, கேரி முல்லிகன், ஆன்ட்ரா டே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.The Father,Sound of Metal, Nomadland ஆகிய படங்களே அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எப்படி பார்க்கலாம்

எப்படி பார்க்கலாம்

ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஸ்டார் டிவி, ஸ்டார் வேர்ல்ட் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது தவிர ஆஸ்கார் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஸ்கார் சமூக வலைதளங்கள் ஆகியவற்றிலும் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X