ஆஸ்கர் 2021… சிறந்த கதை தழுவலுக்கான விருதை வென்றது.. த ஃபாதர் திரைப்படம் !
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது த ஃபாதர் திரைப்படம்
93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு பல இடங்களில் நடைபெறுகின்றன. வழக்கமாக டால்பி தியேட்டரில் நடத்தப்பட்டும் இந்த விழா, கொரோனா தொற்றுநோயால் இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

அகாடமி விருதுகள் 2021 தற்போது நடந்து வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இந்த விருதுகளை ஏற்பாடு செய்துள்ளது.
த ஃபாதர், யூதாஸ் மற்றும் பிளாக் மெசியா, மாங்க், மினாரி, நோமட்லேண்ட், ப்ராமிஸிங் யங் வுமன், சவுண்ட் ஆஃப் மெட்டல், தி டிரையல் ஆஃப் தி சிகாகோ 7 ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. இதில், சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை தி ஃபாதர் திரைப்படம் தட்டிச்சென்றது.
த பாதர் திரைப்படம் 2020ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை ப்ளோரியன் செல்லரால் எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தில் அந்தோணி ஹாப்கின்ஸ், ஒலிவியா கோல்மன், மார்க் காடிசு ஆகியோர் நடித்துள்ளனர்.

மறதி நோய் பற்றி இத்திரைப்படத்தில் ஹாப்கின்ஸ் மற்றும் கோல்வன் ஆகியோர் தங்களது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என 6 பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











