twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18 வருடங்களுக்கு பிறகு... குட்டிக்கு கிடைத்த அதே கவுரவம்... இப்ப 96க்கும் கிடைச்சிருக்கு!

    96 திரைப்பட இயக்குனர் பிரேமிற்கு கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    |

    சென்னை: விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படத்திற்கு கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார்.

    96 Prem to get Kollapudi Srinivas award

    இந்த விருது குறித்து இயக்குநர் ப்ரேம் பேசும்போது, "எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான். ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

    எனக்கு வாழ்த்து கூறிய பலரும் 'கங்க்ராட்ஸ்' என்பதோடு கடந்துவிடவில்லை. ஒவ்வொருவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய்சேதுபதி திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். தற்போது படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது" என்றார்.

    96 Prem to get Kollapudi Srinivas award

    தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகுமே இந்த விருதை மிகவும் உணர்வுப்பூர்வமான விசயமாக கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது. அது கடந்த 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார்.

    அரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்! அரசியலில் குதிக்கும் சன்னி லியோன்... தமிழ்நாட்டு அரசியல்வாதியாகிறார்!

    ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக "கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது" என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள். அந்த வகையில் இன்னும் 96 வருடங்கள் கடந்தாலும் நம் மனதை இதமாக வருடும் 96 படத்தைத் தந்த இயக்குநர் ப்ரேமிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்க இருக்கிறார்கள்.

    இதற்கு முன்னர், 2002ம் ஆண்டு குட்டி படத்தை இயக்கிய ஜானகி விஸ்வநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்கு பிறகு, 18 ஆண்டுகள் கழித்து, தற்போது 96 திரைப்பட இயக்குனர் பிரேம் இந்த விருதை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Read more about: prem kumar பிரேம்
    English summary
    The famous and emtional Kollapudi Srinivas award is announced for 96 movie director Prem this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X