»   »  விஜய் அவார்ட்ஸ்: சில சர்ச்சைகள்... ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

விஜய் அவார்ட்ஸ்: சில சர்ச்சைகள்... ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டிவி விருது விழா வழக்கம் போலவே கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆனந்தாயாழை மீட்டுகிறாள்... பாடலுக்கு விருது கொடுக்கவில்லை என்று இயக்குநர் ராம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு இளையராஜா பாதியிலேயே கிளம்பியது... சிவகார்த்திக்கேயன் அடித்த சர்ச்சை கமென்ட், அமலாபாலுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருந்து சிறப்பிப்பார். ஆனால், துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது (வாயை மூடி பேசவும்) கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. நிகழ்ச்சி முடியும்வரை அவரை காண முடியவில்லை.

ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக்

ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக்

மேலும், 'ரஜினி முருகன்' படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் வெளியிடவில்லை. மாறாக ட்விட்டர் தளத்தில் 6 மணிக்கே வெளியிட்டு விட்டார்கள்.

வெளியேறிய இளையராஜா

வெளியேறிய இளையராஜா

எப்போதுமே பெரும்பாலான விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதில்லை. ஆனால், 'செவாலியே சிவாஜி கணேசன் விருது' வழங்குகிறோம் என்று பல தரப்பட்ட முயற்சிக்கு பிறகு இளையராஜா அழைத்து வந்தார்கள். அவர் வந்த சமயத்தில் அவ்விருது வழங்குவதற்கு சிவாஜி குடும்பத்தினர் மற்றும் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அமர்ந்திருந்த இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். இறுதிவரை சிவாஜி குடும்பத்தினர் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. யாருக்கு இந்த வருடம் செவாலியே சிவாஜி கணேசன் விருது என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கக்கூடவில்லை.

கமல் - தனுஷ்

கமல் - தனுஷ்

இம்முறை விஜய், கார்த்தி, சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நடிகர்களில் கமல், தனுஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆர்யா, ஜெயம் ரவி இருவருமே கலந்து கொண்டாலும் பாதிலேயே வெளியேறிவிட்டார்கள்.

ஹன்சிகா - ஸ்ருதிஹாசன்

ஹன்சிகா - ஸ்ருதிஹாசன்

முன்னணி நடிகைகளில் ஹன்சிகா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். பிரபுதேவா நடனமாடினார்.

உப்பு சப்பில்லாத விழா

உப்பு சப்பில்லாத விழா

இந்தாண்டு கமல் - ஸ்ருதிஹாசன், குஷ்பு - ஹன்சிகா இணைந்து நடனமாடிய சிறு நடனம், சிவகார்த்திகேயன் - துல்கர் சல்மான் விருது கொடுத்தது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர வேறு எந்த ஒரு சுவாரசியமே இல்லாத விழாவாக அமைந்தது.

நள்ளிரவில் நடனம்

நள்ளிரவில் நடனம்

பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது. ஒரு குறுந்தகவல் - லட்சுமி மேனன் நடனமாட அழைக்கப்பட்ட போது மணி நள்ளிரவு கடந்துவிட்டதாம்.

வழக்கம் போலவே குடும்ப விருது

வழக்கம் போலவே குடும்ப விருது

தொலைக்காட்சி உரிமை கொடுத்த படத்துக்கு பெரும்பாலான விருதுகள் கிடைத்தது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை. 'குக்கூ', 'ஜிகர்தண்டா', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்கள் விஜய் டி.வி இடம் உரிமை இருக்கிறது.

ட்விட்டரில் அஞ்சலி

விஜய்க்கு விருது வழங்கவில்லை என்று சில ரசிகர்கள் விஜய் டிவி விருதுவிழாவிற்கு கண்ணீர் அஞ்சலியே செலுத்தினர்.

கனவு உடைஞ்சு போச்சே

விஜய்க்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் இப்படி ஆயிப்போச்சே என்று பதிவிட்டுள்ளனர் சிலர்.

டி.ஆர்.பி வராதேப்பா

இந்த விருது விழாவிற்கு பல பிரபலங்கள் வரவில்லை. எனவே நிகழ்ச்சியில் டி.ஆர்.பி அடிபட்டு போகும் என்று பதிவிட்டுள்ளார் நடிகரும் சன்டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பாஸ்கி.

மோசமான நிலநடுக்கம்

இந்த விருது அறிவிப்பை கேட்கும் போது நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட மோசமாக இருக்கேப்பா என்று பதிவிட்டுள்ளனர் சிலர்.

பவர் ஸ்டார் பெஸ்ட் பா

ரஜினியை விட பவர் ஸ்டார் நிறைய பேரின் பேவரைட் ஆக இருக்கிறாரே என்று கடுப்பில் பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். எது எப்படியோ கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் சிலரை சந்தோசப்படுத்தியும், பெரும்பாலோனோரை சங்கடப்படுத்தியும் உள்ளது விஜய் டிவி விருது விழா.

English summary
The Vijay Awards presented by the Tamil television channel STAR Vijay to honour excellence in Tamil cinema. Some awards in particular so undeserved...Amala Paul for Best Actress.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil