அன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் கிடைத்தது தொடர்பான பாராட்டுக் கவிதை

By Hema Vandana

Recommended Video

இளையராஜாவுக்கு பத்மவிபூஷன்

கலா ரசிகனான உனக்கு

சிம்பொனியும் ஒன்றே

திருவாசகமும் ஒன்றே


சிம்பொனியை செதுக்கி கொடுத்தாய்

திருவாசகத்தை உருக்கிக் கொடுத்தாய்


40 ஆண்டு கால சாதனையை

முழுமையாய்

பதிவு செய்துவிட்டாய்

a tribute to ilayaraja the music maestro

அன்னக்கிளியில் விதையான நீ

இன்று மகாவிருட்சமாய்

படர்ந்து விட்டாய்...


காய்ந்து சருகான

இதயங்களுக்கு

நீரோடையானது - உன் இசை


தேய்ந்து பலமிழந்த

மனங்களுக்கு

மருந்தானது-உன் ராகம்


தாய்ப்பாலைவிட

கலப்படமில்லாத

உன் இசை..

ரசவாத - அமுத சுரபி


எக்காலத்திலும், எல்லாவற்றையும்

சொல்ல உன் சாதனை

ஒன்றே போதும்


நாதத்தின் மூலம்

ஜீவனை தட்டியெழுப்பி

ஆன்மாக்களை ஒன்றோடொன்று

சிலாகிக்க வைத்தாய்


கலாரூபமெடுத்து

கிராமிய மணத்தை

கமழ கொடுத்தாய்


உன் கீதங்கள் எல்லாமே

நல்முத்து சரங்கள் - எந்த முத்து

நல்ல முத்தென்று எடுத்து சொல்ல?


இசைக்கீற்றாய் வலம் வந்து...

ஞான ஊற்றாய் உருமாறி... இன்று

காலத்தின் பொற்கனியாய் இனிக்கிறாய்


ஏழு ஸ்வரங்களும்

அண்ணாந்து பார்க்கின்றன

உன் அசுரத் திறமையை


மூங்கிலின் நாதத்தையும்

குயிலின் சுருதியையும்

ஆர்மோனிய பெட்டிக்குள்

திணித்து உலவ விட்டாய்


வாடாத பாடல்களை

கோர்த்து கொடுத்து

இசை சக்கரவர்த்தியானாய்


மேல்நாட்டு இசைகளை மெருகேற்றி

மேஸ்ட்ரோவானாய்


ஏழு ஸ்வரங்களின் ராகங்களின்

ரகசியங்களை புரிய வைத்து

ராகதேவனானாய்


ஞாலத்தை உணர்ந்த

ஞானிகளுக்கு

ஓர் இசைஞானியானாய்


வாழ்த்தொலிகளும் கரவொலிகளும்,

விண்ணை அதிர பிளக்கின்றன

உன் பத்மவிபூஷன் விருதினால்....


இசையமைக்கப்படாத ராகங்களும்...

மெட்டுப்போடாத பாடல்களும்கூட

பெருமைப்படுகின்றன -உன்னால்


நெகிழ்ச்சிகளின் தொகுப்பாய்...

உருக்கத்தின் மொத்த உருவமாய்...

பிரமிப்பூட்டும் உன் சாதனை


உன் வளர்ச்சி..

அண்ட பெருவெளியிலிருந்து

அதள பாதாளம்வரை

பிரம்மாண்டமாய் நீள்கிறது...


ரசிகர்கள் உறைகின்றனர்

உன் சுருதி லயத்தால்..

தேன் கின்னத்தில் சுவைத்து... திளைத்து

மயங்கி... கிறங்கிய... எறும்பு போல


சக இசையமைப்பாளர்கள் மத்தாய்ப்பாய்

தோன்றிய மறைய-

நீ மட்டும் அகல்விளக்கானாய...

என்றும் நிலைத்து... நிறைந்திருக்க...


நீ அன்று போட்ட

இசைப்பாதையில் - இன்று

புதிய காலடி தடங்கள்


உன் புகழ் எஞ்சியிருக்கிறது

சொல்லப்படாத வார்த்தைகளால்...

எழுதப்படாத எழுத்துக்களால்...


இதற்கு மேல் என்ன இருக்கிறது?

மொத்தத்தில் சரித்திரத்தில்

நீ ஒரு பக்கம் ஆகிவிட்டாய்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X