twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆட்டம் பாட்டத்துடன் 31தேதி.. அபிராமி அவார்ஸ்ட் 2020 !

    |

    சென்னை : அபிராமி விருது வழங்கும் விழா வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

    தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மற்றும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த நபர் தான் அபிராமி ராமநாதன். இவர் ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் திரையிட்டு உள்ளார்.

    Abirami Award Ceremony to be held on 31st

    இவர் சினிமா தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டவர். சென்னையில் உள்ள அபிராமி மெகா மாலின் உரிமையாளர் ஆவர். இவர் பல விருதுகளை குவித்துள்ளார். குறிப்பாக தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

    கடந்த வருடம் தனது மெகா மால் சீரமைக்கப்பட்டு மீண்டும் பல வசதிகள் உடன் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மற்றும் 1000 பேர்கள் அமரும் வசதியுடன் திரையரங்கம் திறக்க பட உள்ளதாக தெரிவித்தார்.

    Abirami Award Ceremony to be held on 31st

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்த அபிராமி ராமநாதன், அபிராமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருமாறு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைத்து உள்ளார்.

    தற்போது அந்த விழா வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. இதில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகை,சிறந்த நடிகர் மற்றும் புதுமுக நடிகர், சிறந்தஇயக்குனர் மேலும் சாதனையாளர் விருது என பல விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    Abirami Award Ceremony to be held on 31st

    இதில் பிக் பாஸ் பிரபலங்கள் ஜஸ்வர்யா டத்தா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக நடைபெற விருக்கும் விழாவில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், பின்னணிப் பாடகர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    English summary
    Abirami Award Ceremony to be held on 31st
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X