Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்
பெங்களூரு: 10வது ஆண்டு SIIMA 2022 விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் இந்த SIIMA 2022 விருதுகள் விழாவில் கலந்துகொண்டனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் சிவப்பு கம்பள வரவேற்பில் ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.
வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை!: கொடியேற்ற சொல்லாமல் வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்
10வது சைம விருதுகள்
இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விருதுகள் விழாவில் ஒன்று சைமா விருது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது விழா, இந்தாண்டு நேற்றும், இன்றும் (10 11) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
தமிழில் இருந்து 6 திரைப்படங்கள்
2021ம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த படத்திற்கான விருதுகளுக்கு டாக்டர், சார்பட்டா பரம்பரை, கர்ணன், மாநாடு, தலைவி, மண்டேலா ஆகிய 6 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறந்த நடிகர்களுக்கான பரிந்துரையில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சைமா விருதுவிழாவில் உலகநாயகன்
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்று வரும் 10வது சைமா விருது விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். கமல் நடிப்பில் இறுதியாக வெளியான 'விக்ரம்' திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்துள்ளது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகமாகக் காணப்படும் கமல், சைமா விருது நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரெட் கார்ப்பேட்டில் ஸ்டைலிஷாக என்ட்ரி
சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், ஸ்மார்ட்டான கறுப்பு வெள்ளை ஜாக்கெட் அணிந்து நிகழ்ச்சிக்குச் சென்ற கமல்ஹாசனுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிக்கு கமல் ஆடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். அதே உற்சாகத்தில் அவர் சைமா விருது விழாவில் பங்கேற்றுள்ளது, கமல் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, சைமா விருது விழாவில் கமல் பங்கேற்ற புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.