சூர்யாவுக்கு தேவாவின் வாழ்த்து... வைரலாகும் மம்முட்டி ட்வீட்

திருவனந்தபுரம் : திரைக்குக்கு ரஜினி அளித்த பங்களிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு 2020 ம் ஆண்டிற்கான 51 வது தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

இதனையடுத்து ரஜினிக்கு பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ரஜினியுடன் இணைந்து நடித்த பிற மொழி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவுக்கு வாழ்த்து

சூர்யாவுக்கு வாழ்த்து

இதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் தேவா என குறிப்பிட்டுள்ளார். ரஜினி நடித்த தளபதி படம் 1991 ம் ஆண்டு வெளியானது.

தளபதியை நினைவுபடுத்திய மம்முட்டி

இந்த படத்தில் சூர்யா கேரக்டரில் ரஜினியும், தேவா கேரக்டரில் மம்முட்டியும் நடித்திருந்தனர். இரு மொழிகளில் உச்சநட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், மம்முட்டியும் அந்த ஒரு படத்தில் இணைந்து நடித்ததை நினைவு கூர்ந்து மம்முட்டி இப்படி ட்வீட் செய்துள்ளார்.

மறக்க முடியாத சூர்யா

மறக்க முடியாத சூர்யா

2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் மம்முட்டி, Get well soon Soorya என ட்வீட் செய்திருந்தார். இதனை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கினர்.

மீண்டும் வைரலாகும் ட்வீட்

மீண்டும் வைரலாகும் ட்வீட்

தற்போது வித்தியாசமாக ரஜினி தன்னுடன் நடித்த படத்தின் கேரக்டரை குறிப்பிட்டு மீண்டும் மம்முட்டி பதிவிட்டுள்ள வாழ்த்து வைரலாகி வருகிறது. இதனை இதுவரை 12,000 பேர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X