Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜோரா ’ஜோ’ கை தட்ட.. சூப்பரா சூர்யா சர்வதேச விருது பார்சலை பிரிக்குறாரு.. வைரலாகும் வீடியோ!
சென்னை: சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு வந்த அந்த விருது பார்சலை மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் சூர்யா பிரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆயுத பூஜைக்கு வெளியாகும் ஆர்யாவின் அரண்மனை 3!
கணவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்த நிலையில், ஜோரா ஜோதிகா கைதட்டி ரசிக்கும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மெல்போர்ன் விருது
மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்றது. அதில் சிறந்த இந்திய திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான இரண்டு பிரிவுகளையும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தட்டிச் சென்றது. இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு அந்த விருது பார்சல் மூலம் வந்துள்ளது.

இந்திய படங்களுடன் போட்டி
இந்திய அளவில் வெளியான படங்களுடன் போட்டிப் போட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இரு பெரிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளையும் சூர்யா பெற்ற நிலையில், ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜெயிச்சிட்ட மாறா
ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருது போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு பல படி முன்னேறியும் விருது கிடைக்காத நிலையில், சிறந்த இந்திய படங்களுக்கான போட்டியில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் நடிகர் சூர்யாவுக்கு விருது கிடைத்துள்ளதை அறிந்த பிரபலங்கள் பலர் ஜெயிச்சிட்ட மாறா என்றே புகழ்ந்து பாராட்டினர்.

கண் கலங்கிய அமிதாப்
இந்திய திரையுலகின் மூத்த சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்து விட்டு கண் கலங்கியதாக சமீபத்தில் சூர்யாவை மனதார பாராட்டியதும் சூர்யா மற்றும் சூர்யா ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.

விருது பார்சல்
இந்நிலையில், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருது பார்சல் சூர்யாவின் வீடு தேடி வந்து விட்டது. அதனை மனைவி ஜோதிகா மற்றும் குடும்ப உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுடன் இணைந்து பிரிக்கும் சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
|
ஜோரா கைதட்டிய ஜோ
நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு தங்களுக்கு வந்த விருது பார்சலை பிரிக்க கணவருக்கு கிடைத்த சர்வதேச விருதை எண்ணி நடிகை ஜோதிகா ஜோரா கைதட்டி சந்தோஷத்தை கொண்டாடும் வீடியோ சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தாவுக்கு விருது
சிறந்த நடிகைக்கான விருதை நடிகை வித்யா பாலன் தட்டிச் சென்றார். தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு சிறந்த சீரிஸ் நடிகை விருது அறிவிக்கப்பட்டது. சூர்யாவை போலவே நடிகை சமந்தாவும் தனக்கான பார்சலை பிரித்து விரைவில் வீடியோ ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.