வேட்டி கட்டிய தமிழன் நான்... தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி... ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை : 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இதில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து அவர் இந்த விருதினை பெற்றுள்ளார். பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டையில் அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத சிறப்பான நடிகராக விளங்கி வருகிறார். தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோ என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் பல வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கேரக்டர்கள்

வித்தியாசமான கேரக்டர்கள்

ஒரு படத்தில் ஹீரோவாக பார்த்தால், அடுத்த படத்தில் வில்லனாகவும், தாத்தாவாகவும், விவசாயியாகவும், போராளியாகவும் பல கெட்டப்புகளில் இவரை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சூப்பர்டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றார்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்

இந்தப் படத்திற்காக தற்போது அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து விஜய் சேதுபதி இந்த விருதினை பெற்றுக் கொண்டார். விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் இருவரும் வேஷ்டி சட்டையில் இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.

Recommended Video

Katrukkenna Veli lead Surya சீரியலை விட்டு விலகுவதாக தகவல்
வேட்டி சட்டையில் பங்கேற்பு

வேட்டி சட்டையில் பங்கேற்பு

தமிழகத்தின் கலாச்சாரத்தை மற்ற மாநிலங்களிலும் நிரூபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் வேட்டி சட்டையில் விழாவில் கலந்து கொண்டது விழாவில் பங்கேற்றவர்களை மட்டுமின்றி விழாவை தொலைக்காட்சியில் கண்டுகளித்த ரசிகர்களுக்கும் உற்சாகத்தை வழங்கியது.

விஜய் சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி மகிழ்ச்சி

முன்னதாக இந்த விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த விஜய் சேதுபதி, எதிர்பார்ப்பு இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததாக கூறியுள்ளார். இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவை மட்டுமே நம்பி ஷில்பா என்ற அந்த கேரக்டரில் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் படம்

சூப்பர் டீலக்ஸ் படம்

கடந்த 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. வெளிநாட்டிற்கு சென்று திருநங்கையாக மாறி வருகிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து இவரை இந்த சமூகம் எவ்வாறு பந்தாடுகிறது என்பது குறித்த படமாக சூப்பர் டீலக்ஸ் வெளிவந்திருந்தது.

திருநங்கை வேடம்

திருநங்கை வேடம்

இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருந்தது. படத்தில் மூன்று ட்ராக்குகளை கொடுத்திருந்தார் இயக்குநர். மேலும் சிறப்பான திரைக்கதையுடன் படத்தை சலிப்பின்றி கொண்டு சென்றிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X