தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு.. ஹன்சிகாவிற்கு விருது வழங்கி கௌரவித்த சைமா!

பெங்களூரு : சைமா 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஐதராபாத்தில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது.

தென்னிந்திய மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழில் சிவகார்த்திகேயன், ஆர்யா என பலரும் விருதுகளை பெற்றனர்.

சைமா 2022 விருதுகள்

சைமா 2022 விருதுகள்

2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.

தென்னிந்திய மொழிப் படங்களுக்கு விருது

தென்னிந்திய மொழிப் படங்களுக்கு விருது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என இந்த விருதுகள் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பான கலைஞர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்கள் அரங்கேறின. சிறந்த பாலிவுட் நடிகருக்கான சைமா விருதை பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் பெற்றார்.

ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆட்டம்

ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆட்டம்

அவர் மேடையேறி அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை, அதே போன்ற டான்ஸ் மூவ்மெண்ட்சுடன் ஆடிக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் தன்னுடைய மனைவி தீபிகா படுகோனேவிற்காக தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பேசிக் காட்டி அவர் கைத்தட்டல்களை அள்ளினார்.

 யூத் ஐகான் விருதுகள்

யூத் ஐகான் விருதுகள்

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்ற நிலையில், யூத் ஐகான் விருதை விஜய் தேவரகொண்டா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் பெற்றனர். நிகழ்ச்சியில் நெகிச்சியான சம்பவமாக மறைந்த புனித் ராஜ்குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

 நடிகை ஹன்சிகாவிற்கு விருது

நடிகை ஹன்சிகாவிற்கு விருது

தமிழிலும் சிவகார்த்திகேயன், ஆர்யா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் சைமா 2022ம் ஆண்டிற்கான விருதை பெற்றனர். நடிகை பிரியங்கா மோகன், வரலட்சுமி சரத்குமாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதனிடையே நடிகை ஹன்சிகாவிற்கும் விருது வழங்கி சைமா கௌரவித்தது.

தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டை நிறைவு செய்த நடிகை

தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டை நிறைவு செய்த நடிகை

தென்னிந்திய மொழிகளில் கடந்த 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை என்ற கௌரவத்தை அங்கீகரிக்கும்வகையில் ஹன்சிகாவிற்கு விருது வழங்கி சைமா கௌரவித்தது. சைமாவும் 10வது ஆண்டை இந்த ஆண்டுடன் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் கவர்ந்த ஹன்சிகா

அனைவரையும் கவர்ந்த ஹன்சிகா

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஹன்சிகா அனைவரையும் கவரும் வகையில் ஜொலிக்கும் வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். அவரது இந்த கெட்டப்பை பார்த்த கேமிராமேன்கள் அவரை புகைப்படம் எடுத்துத் தள்ளினர். விருதுடன், விருது இல்லாமல் அவர் அதிகமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X