சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
சென்னை : ஃபைஷாகான், பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில், நம்ம சென்னை'ஸ் எஃப்.பி. விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பல்துறை சார்ந்த 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், பல நடிகர்கள் தங்களுக்கான விருதை பெற்றனர்.அந்த லிஸ்டை தற்போது பாப்போம்.

விருது விழா
அனைத்து துறையிலும் தங்களது திறமைக்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பான விஷயம் தான். ஆனால் சினிமா துறை என்றால் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று தங்களது விருப்பமான நடிகர், நடிகைகளுக்கு விருது கிடைக்கிறது என்றால் ரசிகர்களுக்கும் அது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்.

பிசினஸ் நிறுவனம்
அந்த வகையில் ஃபைஷாகான், பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில், நம்ம சென்னை'ஸ் எஃப்.பி. விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது .பல நடிகர்,நடிகைகளும் பல ரகமான விருகளை தட்டி சென்றனர்.

உமா ரியாஸ்
உடலை கட்டுக்கோப்பாக பல நடிகர்கள் வைத்திருந்தாலும் முதலில் நம் நினைவுக்கு வருபவர் ரியாஸ் கான். கைப்புள்ள கட்டத்துரை கதாபாத்திரத்தை யாராலும் மாறவே முடியாது .அந்த அளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார் ரியாஸ் .சிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதினை நடிகர் ரியாஸ்கானும்,அவரது மனைவியும் நடிகையுமான உமா ரியாஸ்கான் பெஸ்ட் எண்டர்டெய்னருக்கான விருதினையும் பெற்றனர்.

சாக்ஷி அகர்வால்
மிகவும் ஸ்டைலான நடிகருக்கான விருது நடிகர் பப்லூ பிரித்விராஜ் பெற்றார். எப்போதும் இணையதளப்பக்கத்தில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் மிகவும் ஸ்டைலான நடிகைக்கான விருதை தட்டிச்சென்றார்.

யாஷிகா ஆனந்த்
மிகும் கவர்ச்சி நடிகையும்,இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் மிகவும் பேசப்படும் நடிகைக்கான விருதினை தட்டிச் சென்றார். எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூகவலைத்தளபக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் யாஷிகா. கவர்ச்சி புயல் என்று அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

செல்வாக்கு மிக்க நபர்
சிறந்த புகைப்பட முகம் கொண்ட நடிகைக்கான விருது நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு வழங்கப்பட்டது. நடிகை அபிராமி, சித்ரபதங்கா என்ற விருதினை பெற்றார். சிறந்த செல்வாக்கு மிக்க நபருக்கான விருதினை பிக் பாஸ் நடிகை சுஜா வரூணியும், வளர்ந்து வரும் கன்னட நடிகைக்கான விருதினை சுபரக்ஷாவும் பெற்றனர். மேலும், பலதுறைகளில் சிறந்த சாதனையாளர்கள் பலருக்கும் எஃப்.பி. விருதுகள் வழங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications











