என்ன ஐஸ்வர்யா ராய் இப்படி ஏமாத்திட்டாங்க: ரசிகர்கள் வருத்தம்
Recommended Video

மும்பை: ஸ்டைலிஷ் விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளார்.
ஹெச்.டி. ஸ்டைலிஷ் விருது விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த உடை அணிந்து வந்திருந்தார்.

விருது
விழாவில் ஐஸ்வர்யா ராய்க்கு ஸ்டைல் திவா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராய் நீல நிற உடை அணிந்து வழக்கம் போன்று அழகாக வந்திருந்தார்.

ஸ்ரீதேவி
தீபிகா படுகோனே சிவப்பு நிற பட்டுப்புடவையில் வந்திருந்தார். ஸ்ரீதேவி ஜொலி ஜொலிக்கும் கவுன் அணிந்திருந்தார். சோனம் கபூர் அணிந்திருந்த உடை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஏமாற்றம்
ஐஸ்வர்யா ராயின் உடை அழகாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஸ்டைலிஷ் விருது விழாவுக்கு ஸ்டைலாக வராமல் இப்படி வந்துட்டாரே ஐஸ் என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புகைப்படம்
ஐஸ்வர்யா ராயும், ஸ்ரீதேவியும் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











