விருது விழாவுக்கு தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா ராய்: மாஜி காதலரை பார்த்து நெளிந்த ஆலியா
Recommended Video

மும்பை: மும்பையில் நடந்த விருது விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தேவதை போன்று வந்திருந்தார்.
லக்ஸ் கோல்டன் ரோஸ் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், டாப்ஸி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐஸ்வர்யா ராய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற உடையில் தேவதை போன்று வந்திருந்தார். சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார். விருதை பெற்றுக் கொண்ட பிறகு புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகள் ஆராத்யாவை உடன் அழைத்துச் செல்வார். முதல் முறையாக ஆராத்யா இல்லாமல் ஐஸ்வர்யா விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

கரீனா கபூர்
லக்ஸ் சோப்பின் பிராண்டு அம்பாசிடரான பாலிவுட் நடிகை கரீனா கபூர் ரோஸ் கலர் கவுனில் அழகாக வந்திருந்தார். அவர் தனது மகன் தைமூரை அழைத்து வந்திருந்தால் மீடியாக்காரர்கள் மேலும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

சித்தார்த்
பாலிவுட் நடிகை ஆலியா பட் ஸ்ராப்லெஸ் கவுனில் அழகாக வந்திருந்தார். விருது விழாவில் அவரின் முன்னாள் காதலரான சித்தார்த் மல்ஹோத்ராவும் கலந்து கொண்டார். ஆலியா தற்போது நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார்.

அக்ஷய் குமார்
நடிகர் அக்ஷய் குமார் கோட், சூட்டில் செம ஸ்டைலாக இருந்தார். மனிதர் நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகிறார்.

ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு தன் அம்மா போன்றே டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ளது. அழகான கவுனில் அம்சமாக இருந்தார் ஜான்வி.


Click it and Unblock the Notifications











