மம்மி பட ஹீரோவை ஞாபகமிருக்கா.. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கியதே அவர் தான்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வரிசையாக ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்கள் அப்படியே நடிப்பின் நாயகர்களாக மாறி ஆஸ்கர் விருதுகளை வென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு பேட் பாய்ஸ், எம்ஐபி படங்களில் ஆக்‌ஷன் ஸ்டாராக கலக்கிய வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார்.

இந்நிலையில், இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை மம்மி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் வென்று ஒட்டுமொத்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

 யாரு இந்த பிரெண்டன் ஃப்ரேசர்

யாரு இந்த பிரெண்டன் ஃப்ரேசர்

1991ம் ஆண்டு டாக் ஃபைட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரெண்டன் ஃப்ரேசர் ஸ்டில் ப்ரீத்திங், தி மம்மி 1,2 மற்றும் 3, பிடேஸல்ட், இன்க் ஹார்ட், ஜிஐஜோ, எஸ்கேப் ஃப்ரம் பிளானட் எர்த், பிரேக் அவுட், தி நட் ஜாப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர். கடந்த ஆண்டு அவர் நடித்த தி வேல் திரைப்படம் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்துள்ளது.

 மம்மி ஹீரோ

மம்மி ஹீரோ

1999ம் ஆண்டு வெளியான மம்மி படத்தில் சும்மா 2 துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு மம்மி பேய்களை சுட்டு வீழ்த்தும் செம ஸ்மார்ட்டான அதே பிரெண்டன் ஃபிரேசர் தான் தற்போது 54 வயதில் உடல் எடை அதிகரித்த நபராக தி வேல் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வென்றுள்ளார். எப்படி இருந்த மம்மி ஹீரோ இப்படி ஆகிட்டாரே என அவர் தி வேல் படத்தில் நடித்த போது ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியான நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்கர் விருதுடன் மாஸ் காட்டி உள்ளார் மனுஷன்.

 ஆளே அடையாளம் தெரியாமல்

ஆளே அடையாளம் தெரியாமல்

மார்பிட்லி ஒபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆங்கில ஆசிரியர் தனது வெப்கேமை ஆஃப் செய்து விட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் கதை தான் இந்த தி வேல் (The Whale). என்ன திமிங்கலம் என குண்டாக இருப்பவர்களை நம்மூரில் கலாய்ப்பதை போலவே இந்த படத்துக்கு இயக்குநர் டேரன் அரனாஃப்ஸ்கி இப்படியொரு டைட்டிலை வைத்திருக்கிறார். உடல் பருமன் காரணமாக இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் காரணமாக வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இந்த படம் எடுத்துரைத்துள்ளது. இதில், பார்க்க ஆளே அடையாளம் தெரியாத வகையில் பிரெண்டன் ஃப்ரேசர் உடல் பருமனான ஆளாக நடித்துள்ளார்.

 ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

பிரம்மிக்க வைக்கும் தனது உடல் மொழி மற்றும் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்ட பிரெண்டன் ஃப்ரேசர் தனது தனித்துவமான நடிப்புக்காக ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கிய நிலையில், உணர்ச்சி வசப்பட்டு ஆக்‌ஷன் ஹீரோவாக எல்லாம் நடிக்கும் போது ஒரு அவார்டு கூட கிடைக்கல; ஆனால், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ஆஸ்கர் கிடைத்திருப்பது சொல்ல முடியாத உணர்ச்சியை கொடுத்துள்ளது என கண்கள் குளமாகி அவர் ஆஸ்கர் மேடையில் பேசியது ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் உடன்

ஜூனியர் என்டிஆர் உடன்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற மம்மி பட புகழ் பிரெண்டன் ஃப்ரேசர் ஆர்ஆர்ஆர் ஹீரோ ஜூனியர் என்டிஆர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சிறந்த நடிகருக்கான போட்டியில் ஜூனியர் என்டிஆர் நாமினேஷன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X