தேசிய விருது: சூர்யா, ஆர்யா, தனுஷ், ஜூனியர் என்டிஆர், ராம்சரணை துவம்சம் செய்த புஷ்பா அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத்: புஷ்பானா ஃபிளவருன்னு நினைச்சியா ஃபயரு என தக் லைஃப்பாக நடித்து மிரட்டிய அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. சிறந்த நடிகைக்காக விருதினை ஆலியா பட் மற்றும் க்ரித்தி சனோன் இருவரும் ஷேர் செய்துக் கொண்ட நிலையில், சிறந்த நடிகருக்கான விருதினை சோலோவாக தட்டித் தூக்கி உள்ளார் அல்லு அர்ஜுன்.

புஷ்பா படத்தில் செம்மரக் கடத்தல் டானாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு 69வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு வந்த எல்லாமே டான் தான்: ஜெய்பீம் படத்தில் நடித்த சூர்யா, கர்ணன் படத்தில் நடித்த தனுஷ் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் உசுரை கொடுத்து நடித்த ஆர்யா என தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்களில் ஒருவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவருக்கும் கிடைக்காதது தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய செய்துள்ளது.
அதே போல ஆர்ஆர்ஆர் படத்தில் போட்டிப் போட்டு நடித்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இருவருக்குமே தேசிய விருது கிடைக்கவில்லை. அசால்ட்டாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை அல்லு அர்ஜுன் அள்ளி இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் அட்டகாசம்: கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு லூஸான சட்டை மற்றும் பேன்ட் போட்டுக் கொண்டு புஷ்பாவாகவே நடித்து மாஸ் காட்டியிருப்பார் அல்லு அர்ஜுன். ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த அல்லு அர்ஜுனுக்குள் இருந்த நடிகனை ஒட்டுமொத்தமாக வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குநர் சுகுமார்.
புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்த நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். புஷ்பா 2 படத்தில் இன்னமும் அல்லு அர்ஜுன் நடிப்பு மெர்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படத்தில் நடித்தே சிறந்த நடிகருக்கான விருதினை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











