69th National awards: சிறந்த பாடல்களுக்கான விருதை பெற்றது புஷ்பா படம்!
சென்னை: இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் என திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 69வது தேசிய விருதுகள் இன்றைய தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மொழிப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2021ம் ஆணடிற்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் கோலிவுட்டில் அதிகமான விருதுகள் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிறந்த பாடல்களுக்கான தேசிய விருதை பெற்ற புஷ்பா படம்: இதிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய விருதுகள் தற்போது டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப் போற்று போன்ற படங்கள் அதிகமான தேசிய விருதுகளை அள்ளின. அந்த வகையில், இந்த ஆண்டும் அதிகமான தமிழ்ப்படங்கள் தேசிய விருதுகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ஜெய்பீம், விநோதசித்தம், மாநாடு, கர்ணன், சார்ப்பட்டா பரம்பரை போன்ற படங்கள் அதிகமான கவனத்தை ஈர்த்தவை. அந்த வகையில் இந்த படங்களில் ஒன்றிக்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் அதிகமான விருதுகளை அள்ளிய நிலையில், 2021ம் ஆண்டில் அவரது ஜெய்பீம் படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி :தி நம்பி எஃபெக்ட் இந்திப் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. மாதவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தேசிய விருதை பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. பயோ பிக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2021ம் ஆண்டிற்கான சிறந்த பாடல்கள் பிரிவில் அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் விருதை அள்ளியுள்ளது. இந்தப் படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஐயா சாமி உள்ளிட்ட படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் சர்வதேச அளவில் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஆக்ஷன் படத்திற்கு இத்தகைய வரவேற்பை பெற்றுள்ளது புஷ்பா படம். இந்தப் படத்தின் கதை கேங்ஸ்டர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. தன்னுடைய ரொமாண்டிக் ஹீரோ லுக்கை மாற்றிக் கொண்டு இந்தப் படத்திற்காக மெனக்கெட்டிருந்தார் அல்லு அர்ஜூன். அவரது இந்த முயற்சிக்கு தற்போது சிறப்பான பலன் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











