»   »  அமிதாப்புக்கு 'விசிட் லண்டன்' விருது

அமிதாப்புக்கு 'விசிட் லண்டன்' விருது

Subscribe to Oneindia Tamil
Amithab Bachan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு விசிட் லண்டன் சிறப்பு விருதினை, லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டன் வழங்கிக் கெளரவித்தார்.

லண்டன் மேயர் லிவிங்ஸ்டன் இந்தியா வந்துள்ளார். மும்பையில் முகாமிட்டுள்ள அவர் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியை சுற்றிப் பார்த்தார்.

நேற்று ஹோட்டல் தாஜ்மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தி விசிட் லண்டன் சிறப்பு விருதினை வழங்கினார்.

லண்டன் - மும்பை கிரியேட்டிவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரு பெருநகரங்களிலும் கிரியேட்டிவ் தன்மையுடன் கூடிய தொழிற்சாலைகளை நிறுவும் நோக்கத்தில் லண்டன் - மும்பை கிரியேட்டிவ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நேற்று லிவிங்ஸ்டன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள், இங்கிலாந்தின் புகழ் பெற்ற நாடகக் குழுவினர், இசைக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விசிட் லண்டன் விருதைப் பெற்ற அமிதாப் பச்சன் பேசுகையில், இந்தக் கெளரவத்திற்கு நன்றி என்றார். அமிதாப் விருது பெறுவதை அவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஸ்வர்யா ராயும் நேரில் கண்டுகளித்தனர்.

லண்டன் மேயர் லிவிங்ஸ்டன் பேசுகையில், லண்டனில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 49 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஐரோப்பாவில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் 32 பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

2006ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

இந்தியாவிலிருந்து கடந்த 2006ம் ஆண்டு லண்டனுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 2005ம் ஆண்டு இது 1 லட்சத்து 66 ஆயிரமாக இருந்தது என்றார்.

Read more about: amitabh bachchan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil