twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அமுதவாணனின் கோட்டா

    |

    சென்னை: இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.

    அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

    மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள்.

     “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ எட்டு வயதாச்சு…நெகிழ்ந்த இயக்குனர்! “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ எட்டு வயதாச்சு…நெகிழ்ந்த இயக்குனர்!

    64 சர்வதேச விருதுகள்

    64 சர்வதேச விருதுகள்

    அத்துடன் கோட்டா திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை. இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது. இதன் பிறகும் இன்னும் பல விருதுகளை குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

     திரைப்பட விழாவில்

    திரைப்பட விழாவில்

    அதில் முக்கிய விருதாக டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.இந்நிலையில், மேலும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவிற்கு மிகவும் பெருமையான தருணம் இது .

    சரியான அங்கீகாரம்

    சரியான அங்கீகாரம்

    எதார்த்தமான கதை,அழுத்தம் திருத்தமான திரைக்கதை, மிகவும் இயல்பாக நடித்த நடிகர்கள் என்று பல வகையில் பல பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. நல்ல படைப்புக்களை சரியாக அங்கீகாரம் கொடுத்தால் படைப்பாளியின் திறன் மேலும் மேலும் நிதர்சனமான உண்மை .

    ஆரோக்கியமான

    ஆரோக்கியமான

    பல விதமான கமர்ஷியல் படங்களுக்கு நடுவே இப்படிப்பட்ட படங்களும்,இந்த மாதிரி படங்களுக்கு கிடைக்கும் விருதுகளும் மிகவும் ஆரோக்கியமானவை . நிறைய இயக்குனர்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் . நல்ல கதை தான் என்றும் ஜெயிக்கும் என்பதற்கு இப்படி சில படங்கள் சிறந்த உதாரணம்.

    English summary
    Director Amuthavanan’s Quota wins best film award at International Award functions. This film contains many social messages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X