கேன்ஸ் விழாவில் கேட் வாக் போக வந்தேன்னு நினைச்சியா?.. சிறந்த நடிகை விருது வென்ற அனசுயா செங்குப்தா!

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்து வருகிறார். நடிகை தீபிகா படுகோன் நடுவராக தேர்வு செய்யப்பட்டு அசத்திய நிலையில், முதல் இந்திய நடிகை சிறந்த நடிகைக்கான விருதை கேன்ஸ் திரைப்பட விழாவில் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சினிமா கலைஞர்களின் சொர்க்கபுரியாக கேன்ஸ் நகரம் திகழ்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட இந்திய சினிமாக்கள் அதிகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து அந்த ஆண்டு விழாவை நடத்தியது. கமல்ஹாசன், மாதவன், பா. ரஞ்சித், ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

Anasuya Sengupta turns1st Indian to win best actress award at Cannes for Shameless movie


தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, பூஜா ஹெக்டே, சோபிதா துலிபாலா, அதிதி ராவ், கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். ஆனால், முதல் முறையாக இந்திய நடிகை ஒருவர் அங்கே சிறந்த நடிகைக்கான விருதை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

அனசுயா செங்குப்தா சாதனை: ”ஷேம்லஸ்” படத்தில் நடித்ததற்காக இந்திய நடிகை அனசுயா செங்குப்தாவுக்கு சிறந்த நடிகைக்கான கேன்ஸ் விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விருது விழாவில் அனசுயா செங்குப்தா சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார். 77 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய நடிகை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Anasuya Sengupta turns1st Indian to win best actress award at Cannes for Shameless movie

நடிகையான புரொடக்‌ஷன் டிசைனர்: கோவாவில் வசித்து வரும் அனசுயா செங்குப்தா மும்பையில் புரொடக்‌ஷன் டிசைனராகத்தான் வேலை பார்த்து வருகிறார். அதிகமாக சினிமா படங்களில் நடிக்காமல் இருந்து வரும் இவரை ஃபேஸ்புக் நண்பரான பல்கேரியன் இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜோனோவ் பார்த்து பிடித்துப் போன நிலையில், தனது படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனசுயா செங்குப்தா “ஷேம்லஸ்” படத்தில் நடித்த நிலையில், சிறந்த நடிகைக்கான கேன்ஸ் திரைப்பட விருதை வென்றுள்ளார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X