»   »  11 விருதுகளை குவித்த 'அன்பே சிவம்'

11 விருதுகளை குவித்த 'அன்பே சிவம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த பிரபல இந்தி பட இயக்குனர் சாந்தராம் நினைவாக வழங்கப்படும் விருதுகளில் பதினொன்றை கமல்நடித்த 'அன்பே சிவம்' படம் தட்டிச் சென்றுள்ளது.

ராஜ்கமல் அகாடமி ஆப் சினிமாட்டிக் எக்ஸலன்ட்ஸ் என்னும் நிறுவனம் மறைந்த இந்தி பட இயக்குனர் நினைவாகஆண்டுதோறும் இந்திய மொழிப் படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அன்பே சிவம் பெற்றுள்ள விருதுகள் விவரம்:

சிறந்த படம்- 'அன்பே சிவம்'

சிறந்த நடிகர், சிறந்த கதை மற்றும் திரைக் கதையாளர், சிறந்த பிண்ணனிப் பாடகர் ( 3 விருதுகள்)- கமல்ஹாசன்

சிறந்த இயக்குனர்- சுந்தர்.சி

சிறந்த இணை நடிகர்- மாதவன்

சிறந்த நடன இயக்குனர்- பிருந்தா தினேஷ்

சிறந்த கலை இயக்குனர்- பிரபாகரன்

சிறந்த ஒளிப்பதிவு இயக்குனர்- ஸ்ரீதர்

சிறந்த ஒப்பனையாளர்- அனில் வி. பிரேம் கிரிகர்

மற்றும் சிறந்த பிண்ணனிப் பாடகி விருதும் இப் படத்திற்குத் தரப்பட்டுள்ளது.

விருது பெறும் பிற தமிழ்க் கலைஞர்கள் விவரம்:

பாலுமகேந்திரா: சிறந்த படத்தொகுப்பு (ஜூலி கணபதி)

சரிதா: சிறந்த நடிகை (ஜூலி கணபதி)

த்ரிஷா: சிறந்த புதுமுக நடிகை (மெளனம் பேசியதே)

ஸ்ரீதேவி: சிறந்த இணை நடிகை (பிரியமான தோழி)

வித்யாசாகர்: சிறந்த இசையமைப்பாளர் (பார்த்திபன் கனவு)

யுவன் சங்கர் ராஜா: சிறந்த பிண்ணனி இசையமைப்பாளர் (காதல் கொண்டேன்)

இந்த விருதுகள் வரும் பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil