நரபலி மற்றும் பிளாக் மேஜிக்..விருதுகளை குவித்து வரும் "அந்த நாள்"..மீண்டும் சாதனை பட்டியலில் ஏவிஎம்!
சென்னை: நரபலி மற்றும் பிளாக் மேஜிக், திரில்லர் போன்ற விஷயங்களை மையக்கருத்தாக கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் "அந்த நாள்".
இந்த படத்தில் நடிகர் ஆர்யன் ஷியாம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஹீரோயின்களாகவும் அறிமுகம் ஆகின்றனர்.
இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு தரப்பில் பல விருதுகளை குவித்து வருகிறது.

அறிமுக நடிகர்கள்
அந்த நாள் திரைப்படத்தில் நடிகர் ஆர்யன் ஷியாம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார், புதுமுக நாயகிகள் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு நடித்துள்ளனர். கிஷோர் ராஜ்குமார் , இமான் அண்ணாச்சி போன்ற பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த "அந்த நாள்" திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை குவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இரவின் நிழல்
இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபனின் ரசிகரான இப்படத்தின் கதாநாயகன் ஷியாம். இந்தப் படத்தை பார்த்திபனுக்கு காட்டி, ஆசியும் பெற்றுள்ளார். மேலும் தனது அடுத்த படத்தில் இருவரும் இணைய போவதாகவும் கூறுகின்றனர். இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு, பலரால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா போன்ற பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஏவிஎம் நிறுவனத்தின் சொந்தங்கள்
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு ஸ்டூடியோ என்றால் ஏவிஎம் ஸ்டுடியோ. அதுமட்டுமல்லாமல் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலதரப்பட்ட படங்கள் நம் சினிமா ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தது யாவரும் அறிந்ததே. ஏவிஎம் சரவணன் அவர்களுடைய மகன் எம்எஸ் குகன் மற்றும் எம் எஸ் குகனுடைய மகள் அபர்ணாவை திருமணம் செய்து கொண்டவர் தான் ஆர்யன் ஷியாம். எம்எஸ் குகனுடைய மாப்பிள்ளை ஏவிஎம் சரவணனின் பேத்தியின் கணவர்.

மீண்டும் சாதித்த ஏவிஎம்
அதேபோல் இந்த "அந்த நாள்" திரைப்படமும் பல விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தை வி.வி.கதிரேசன் இயக்கியுள்ளார். கதை மற்றும் திரைக்கதையை இப்படத்தில் நாயகனான ஆரியன் ஷியாம் எழுதியுள்ளார். கிரீன் மேஜிக் என்டர்டைன்மென்ட் ஆர். ரகுநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். யூரோப் ஃப்லிம் ஃபெஸ்டிவல் சார்பில் சிறந்த இயக்குநருக்கான விருது வி.வி கதிரேசனுக்கும், நியூயார்க் மூவி அவார்ட்ஸ் அமெரிக்கன் கோல்டன் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல், வேர்ல்ட் பிலிம் கார்னிவல் சிங்கப்பூர், மெடுசா ஃபிலிம் ஃபெஸ்டிவல் உள்ளிட்ட நான்கு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் ஆரியன் ஷியாம் பெற்றுள்ளார். ஏற்கனவே பிரம்மாண்ட நாயகன் படத்தில் பகவான் வெங்கடாசலபதி போல் நடித்ததற்காக ஆர்யன் ஷ்யாமை பாராட்டி Young Superstar என்ற பட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











