விஜய் விருது வழங்கும் விழா: ஸ்ருதி , ஹன்சிகா, அனிருத் ஆட்டம்

By Mayura Akilan

சென்னை: விஜய் விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் ஆட்டம், பாட்டம் பட்டையை கிளப்பப்போகிறதாம்.

சிறந்த நடிகர், நடிகைகளுக்கு ஆண்டு தோறும் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்துக்கான விஜய் விருதுகள் வழங்கும் விழா வரும் 5ஆம் தேதி சனிக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

நட்சத்திரங்களுக்கு விருதுகள்

நட்சத்திரங்களுக்கு விருதுகள்

நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குனர்கள், புதுமுக நட்சத்திரங்கள், சிறந்த படங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என சாதனையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

நடுவர் குழுவில் சிம்ரன்

நடுவர் குழுவில் சிம்ரன்

சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் டைரக்டர் ரவி கே.சந்திரன், பிரதாப் போத்தன், யூகிசேது, நடிகை சிம்ரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைத்து படங்களையும் பார்த்து சிறந்த படங்களை தேர்வு செய்துள்ளனர்.

வாக்களித்த ரசிகர்கள்

வாக்களித்த ரசிகர்கள்

ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நயன்தாரா, ஹன்சிகா

நயன்தாரா, ஹன்சிகா

ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் போட்டியில் இந்த ஆண்டு த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

கமல், அஜீத்

கமல், அஜீத்

பிடித்த நடிகர்கள் போட்டியில் கமலஹாசன், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

செவாலியே சிவாஜிகணேசன் விருது

செவாலியே சிவாஜிகணேசன் விருது

திரையுலகின் சாதனையாளருக்கு இவ்விழாவில் செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை கமலஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், டைரக்டர் பாலச்சந்தர், எஸ்.பி.பாலசுப்பிரமணியனம், இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றோர் பெற்றுள்ளனர். எட்டாவது ஆண்டாக இந்த முறையாக இவ்விருது வழங்கப்பட உள்ளது.

ஆட்டம் பாட்டம் அமர்களம்

ஆட்டம் பாட்டம் அமர்களம்

ரசிகர்கள், திரைநட்சத்திரங்கள் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகாவின் ஆகியோர் மேடையில் நடனமாட உள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தும் மேடையில் ஆடி அசத்த உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X