twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலா 4 விருதுகளைத் தட்டிச் சென்ற தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன்-ரஹ்மானுக்கு விருதில்லை

    By Sudha
    |

    Inception
    லாஸ் ஏஞ்சலெஸ்: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். இன்செப்ஷன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் ஆகிய படங்கள் தலா 4 விருதுகளைத் தட்டிச் சென்றன. தி சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தன. தி பைட்டர் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

    83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் இன்று கோலாகலமாக நடந்தேறியது.

    இதில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

    இன்செப்ஷன் திரைப்படம் 4 விருதுகளைக் குவித்தது. அதேபோல தி கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கும் 4 விருதுகள் கிடைத்தன.

    விருதுகள் பெற்றோர் விவரம்:

    சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
    சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
    இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
    இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
    சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
    விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
    பொழுதுபோக்கு டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
    குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
    டாக்குமென்டரி - ஷார்ட் சப்ஜெக்ட்- ஸ்டிரேஞ்சர்ஸ் நோ மோர்
    காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
    மேக்கப் - தி உல்ப்மேன்
    ஒலிக் கலவை - இன்செப்ஷன்
    இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
    சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
    சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
    திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
    திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
    அனிமேஷன் பொழுது போக்குப் படம் - டாய் ஸ்டோரி 3
    அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
    சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
    ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
    கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
    சிறந்த திரைப்படம் - தி கிங்ஸ் ஸ்பீச்

    English summary
    Indian music maestro A R Rahman lost out in both the categories he was nominated to in the 83rd Annual Academy Awards - Best Original Score and Original Song for the film '127 Hours'. The 'Best Original Score' award went to Trent Reznor and Atticus Ross for 'The Social Network' and the 'Best Original Song' went to Randy Newman for 'We Belong Together'(Toy Story 3). Inception won 4 awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X