டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தீனநாத் மங்கேஷ்கர் விருது நேற்று வழங்கப்பட்டது. அதன் புகைப்படங்களை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில், டெய்லர் ஸ்விஃப்டுடன் இணைந்து கச்சேரி நடத்த விரும்புவதாகவும் தனது விருப்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
மேலும், தொடர்ந்து டெய்லர் ஸ்விஃப்ட் ஆல்பத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கூடிய விரைவில் ஏ.ஆர். ரஹ்மான் - டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரியை ரசிகர்கள் கண்டு ரசிக்கப் போவது உறுதி என்றே தெரிகிறது.

34 வயதாகும் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரிகளை நடத்தியே பல நூறு கோடி சொத்துக்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யாரு இந்த டெய்லர் ஸ்விஃப்ட்?: 110 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து இவரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2006ம் ஆண்டு தனது பெயரில் இவர் வெளியிட்ட ஆல்பம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னர் ஃபியர்லெஸ், ஸ்பீக் நவ், ரெட், தன்னுடைய பிறந்த ஆண்டை குறிக்கும் '1989', ரெப்யூடேஷன், லவ்வர், ஃபால்க்லோர், எவர்மோர், மிட்நைட்ஸ், தி டார்ச்சர்ட் போயட் டிபார்ட்மெண்ட்ஸ் என ஏகப்பட்ட ஆல்பங்களை வெளியிட்டு உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் டெய்லர் ஸ்விஃப்ட்.
அவருக்கு எது புடிக்குமோ?: ரொமாண்டிக் பாடல் என்றாலும் ஒகே அல்லது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் துள்ளல் பாடல் என்றாலும் ஓகே டெய்லர் ஸ்விஃப்ட் உடன் இணைந்து பணியாற்ற வேண்டுமானால் அவர் எந்த வகையான பாடலை இசைக்க சொல்கிறாரோ இசைக்கலாம். பாடல் வரிகளை எப்படியும் அவர் தான் எழுதப் போகிறார் என சமீபத்தில் கனடாவில் ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியிருந்தார். மேலும், டெய்லர் ஸ்விஃப்டின் புதிய ஆல்பமான The Tortured Poets Department ஆல்பத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு கொடுத்துள்ளார்.
இருவரும் இணைந்து: இதன்மூலம் மிக விரைவாகவே இருவரும் இணைந்து இசைக் கச்சேரி நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக இசை ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற்ற போது ஏகப்பட்ட மோசடிகள் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த இசை நிகழ்ச்சியை வெளிநாட்டில் தான் ஏ.ஆர். ரஹ்மான் நடத்துவார் என்றும் கூறுகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான், அமிதாப் பச்சனுக்கு விருது: லதா மங்கேஷ்கர் குடும்பம் சார்பில் கொடுக்கப்படும் லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது நேற்று அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்வர் புரஸ்கார் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையில் நேற்று வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இப்படியொரு பெருமை தனக்கு கிடைத்தது ரொம்பவே சந்தோஷம் என பதிவிட்டு அந்த விருதுகளை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளர்.

தக் லைஃப் தயாராகுது: மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தக் லைஃப் படம் தாறுமாறாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட மியூசிக் பெரிதாக எடுபடவில்லை. ஆடு ஜீவிதம் படத்துக்கு அவர் போட்ட பாடல்களும், பின்னணி இசையும் நிச்சயம் அவருக்கு இந்த ஆண்டு விருதுகளை பெற்றுத் தரும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











