twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானில் ஃபுகுவோகா விருதை பெற்ற ஆஸ்கர் மன்னன் ஏஆர் ரஹ்மான்

    By Siva
    |

    டோக்கியோ: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை சேவையை பாராட்டி அவருக்கு ஜப்பானில் ஃபுகுவோகா விருது வழங்கப்பட்டுள்ளது.

    ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு ஜப்பான் ஃபுகுவோகா விருதை வழங்கி வருகிறது. ஜப்பானில் உள்ள ஃபுகுவோகா நகரின் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை யோகட்டோபியா அமைப்பு அளிக்கிறது.

    AR Rahman receives prestigious Fukuoka award

    கிராண்ட் விருது, அகாடமிக் விருது மற்றும் கலை, கலாச்சார விருது ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் கலை மற்றும் கலாச்சார பிரிவு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

    ஃபுகுவோகா நகரில் நடந்த விழாவில் ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இசைத் துறையில் ரஹ்மான் செய்துள்ள சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கர், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபார், சரத் மஸ்திரோ கலைஞர் அஜ்மத் அலி கான், சமூக மற்றும் கலாசாரத்துறையில் ஆசிஸ் நந்தி, அரசியல் அறிவியல், வரலாற்று துறை அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் வந்தன ஷிவா, ஓவியக்கலைஞர் நளினி மாலினி, வரலாற்று, சமூக ஆய்வாளர் ராமச்சந்திரா குகா ஆகியோர் ஃபுகுவோகா விருதை பெற்றுள்ளனர்.

    English summary
    Oscar winner AR Rahman has received Fukuoka award at a function held in Japan for his outstanding contribution to South Asian music.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X