அருண்பாண்டியனின் மகள் கீர்த்திக்கு… ஜீ சினி அவார்டு
சென்னை: ஜீ சினி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அருண் பாண்டியனின் மகள் கீர்த்திக்கு வழங்கி கௌரவித்தது.
கோலகலமாக நடந்து முடிந்துள்ளது ஜீ சினி விருது வழங்கும் விழா. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைப்பெற்ற இவ்விழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல முக்கியமான முன்னணி தமிழ் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில் அருண்பாண்டியனின் மகளான கீர்த்திபாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகைகான விருது தும்பா படத்தில் நடித்ததற்காக வழங்கபட்டது . மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி பாண்டியனுக்கு முதல் படம் தான் தும்பா. இந்த படத்தில் காடுகளை பாதுகாப்பது, விலக்குகளை பாதுகாப்பது என்பதை சொல்லும் ஒரு கருத்துப்படமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜீ சினி விருது வழங்கும் விழாவில் , சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனம் என பலருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் கௌதம் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன் , சுஹாசினி மற்றும் கரு . பழனியப்பன் ஆவார்கள். இவர்கள் தான் இந்த விழாவின் மொத்த தலைப்பிற்கேற்ப விருது வெல்ல போவது யார் யார் என்ற முடிவை எடுத்தார்கள்
இந்நிகழ்ச்சியில் கமல்ஹசன், தனுஷ், நயன்தாரா, மற்றும் சமந்தா உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் இந்த நட்சத்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், அனிரூத் ,யுவன் சங்கர் ராஜா ,கௌதம் மேனன், டி.இம்மான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து ஒரு சிறிய பாடல் நிகழ்வை அறங்கேற்றினர் , இந்த நிகழ்ச்சியின் ஹேலைட்டே இதுதான் என்று கூட சொல்லலாம் .
'ஜீ சினி விருதுகள் மிக பிரபம்மாண்டமாக நடந்து முடிந்து உள்ளது . இதனால் ஜீ சினி குழுமம் தமிழில் புதிய உச்சத்தை அடைந்து என்று சொல்லலாம். விஜய் டி.வி மற்றும் மற்றும் சன் தொலைகாட்சிகள் நடத்தி வந்ததற்கு இணையான ஒரு விழாவை நடத்தி விருதுகளை வழங்கி இருக்கிறது ஜீ டி.வி


Click it and Unblock the Notifications











