»   »  நவ்யா, பரத், சரண்யாவுக்கு விருது

நவ்யா, பரத், சரண்யாவுக்கு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

2006ம் ஆண்டின் சிறந்த நடிகர்களாக பரத், தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோரும் சிறந்த நடிகைகளாகஸ்னேகா, நவ்யா நாயர், சந்தியா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கார்பரேட் கிளப்பும் சினிமா மக்கள் தொடர்பாளர்களின் வி4 அமைப்பும் இணைத்து கடந்த ஆண்டுக்கான சிறந்தநடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கின.

ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2006ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கானவிருது பரத்துக்கு வழங்கப்பட்டது. இவர் எம்.மகன், வெயில் படங்களில் சிறப்பாக நடித்தற்காக இவ்விருதுஅவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தனுஷ் (புதுப்பேட்டை), ஜீவா (ஈ), ஜெயம் ரவி (உனக்கும் எனக்கும்)ஆகியோருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

புதுப்பேட்டை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஸ்னேகாவுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சந்தியா(வல்லவன்), நவ்யா நாயர் (அமிர்தம்) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்து அறிமுக நடிகருக்கான விருது சுந்தர்.சிக்கு (தலைநகரம்) வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக நடிகைக்கானவிருது சரண்யாவுக்கு (பாரிஜாதம்) வழங்கப்பட்டது. இவ்விருதினை நடிகர் சரத்குமாரும், பிரபுவும்வழங்கினார்கள்.

சிறந்த குணசித்திர நடிகர் விருது ராதாரவிக்கும், குணசித்திர நடிகை விருது சரண்யாவுக்கும் வழங்கப்பட்டது.இவ்விருது அடைக்கலம் படத்தில் நடித்ததற்காக இவர்களுக்கு கிடைத்தது.

சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு வழங்கப்பட்டது. சிறந்த டைரக்டருக்கான விருதுகள் கே.எஸ்ரவிக்குமார்,பி.வாசு, சிம்புத்தேவன், சாமி, வசந்த பாலன், எஸ்.ஏ.சந்திரசேகரன், தருண்கோபி, கிருஷ்ணா ஆகியோருக்குவழங்கப்பட்டன.

சரத்குமார், பிரபு, சத்யராஜ், மனோரமா, ஸ்ரீப்ரியா ஆகியோருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil