இம்சை அரசன், வெயிலுக்கு விருது
இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் வெயில் ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துலகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த பல எழுத்தாளர்களை உறுப்பினராகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, கலை உலகில் சாதனை செய்வோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பதை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து அந்தப் படங்களுக்கு விருது கொடுத்து வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்த ஆண்டு வெயில் மற்றும் இம்சை அரசன் 23ம் புலிகேசி ஆகிய படங்களுக்கு விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அருணன் மற்றும் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் இதைத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்த சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைப் பிரிவில் வெயில் படமும், சமூக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு, கோக், பெப்சி பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்பிய வகையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படமும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் ஓசூரில் நடைபெறும் விழாவில் இரு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இரு படங்களையும் இயக்குநர் ஷங்கர்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் படத்தை வசந்தபாலனும், இம்சையை சிம்பு தேவனும் இயக்கியிருந்தனர்.
நாமும் வாழ்த்துவோம்


Click it and Unblock the Notifications











