விருதுகள்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும், நடிகர் கமலஹாசனுக்கு சிவாஜி விருதையும் தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 12 ம் தேதிகொண்டாடப்படும் விழா ஒன்றில் வழங்குவார்.
மேலும் நடிகை சிம்ரனுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார். இந்த விருது 1999 ம் ஆண்டிற்கான விருதாகும்.
விருது வழங்கும் விழா ஜனவரி 12 ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கும். விழாவில் தகவல் ஒலிபரப்புத்துறைஅமைச்சர் முல்லை வேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசுவார்.
யு.என்.ஐ.
Comments


Click it and Unblock the Notifications