குஷ்பு, பத்மப்ரியா, ஊர்வசிக்கு விருது
கேரள அரசின் திரைப்பட சினிமா விருது நடிகைகள் குஷ்பு, ஊர்வசி, நடிகர் பிருத்விராஜ் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது.
ஆண்டுதோறும் கேரள அரசு சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது கொடுத்து கெளரவிக்கிறது. 2006ம் ஆண்டுக்கான விருதுகளை கேரள அரசு சமீபத்தில் அறிவித்தது.விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழக செனட் இல்லத்தில் நடந்தது. முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் விருதுகளை வழங்கினார்.
சிறந்த படமாக திருஷ்டாந்தம் படத்திற்கு விருது கிடைத்தது. நோட்புக் படத்திற்கு இரண்டாவது சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான விருது பிருத்வி ராஜ் பெற்றார். சாய்குமாருக்கு இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
மது சந்திரலேகா படத்தில் நடித்த ஊர்வசி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். கருத்த பக்ஷிகள் படத்தில் சிறப்பாக நடித்த பத்மப்பிரியாவுக்கு 2வது சிறந்த நாயகிக்கான விருது கிடைத்தது.
நடிகை குஷ்புவுக்கு சிறப்பு நடுவர் விருது கிடைத்தது. ராத்திரி மழை படத்திற்காக திறந்த இயக்குநருக்கான விருது லெனின் ராஜேந்திரனுக்குக் கிடைத்தது.


Click it and Unblock the Notifications











