ஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள்

By Staff

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக சயிப் அலிகானும், ஹஸீனா என்ற கன்னடப் படத்தில்நடித்த தாரா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்துள்ளன.

2004ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக பேஜ் 3 என்ற படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மாதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார்.

சிறந்த நடிகராக ஹம் தும் என்ற இந்திப் படத்தில் நடித்த சயிப் அலி கான் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுஹஸீனா என்ற கன்னடப் படத்தில் நடித்த தாராவுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகராக ஹம் தும் என்ற இந்திப் படத்தில் நடித்த சயிப் அலி கான் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுஹஸீனா என்ற தமிழ்ப்படத்தில் நடித்த தாராவுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடகருக்கான விருது உதித் நாரயணனுக்கும், சிறந்த பாடகிக்கான விருது சித்ராவுக்கு கிடைத்துள்ளது. ஆட்டோகிராப்படத்தில் பாடியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமேஎன்று தொடங்கும் பாடலை எழுதியதற்காக பா. விஜய் சிறந்த பாடலாசிரியாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வைரமுத்துவிற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தேசிய விருது பெறும் 2வது பாடாலாசிரியர் பா. விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பொழுதுபோக்கு படங்களாக ஷாருக்கான் நடித்த வீர் ஸாராவும், சேரனின் ஆட்டோகிராப்பும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனராக ஸ்வப்னேர் தின் என்ற படத்தை இயக்கிய புத்ததேவ் தாஸ் குப்தாஅறிவிக்கப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X