twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவையே அசரடித்த பாகுபலிக்கு தேசிய விருது.. செம பொருத்தம்தான்!

    |

    சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி சினிமா உலகில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட "பாகுபலி" படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

    காவியத் தன்மை கொண்ட அரசர்கள் சார்ந்த வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியாவாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டிய திரைப்படம் எஸ்.எஸ்.ராஜ மெளலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி.

    படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர்ப்பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் அருமையான திரைக்கதையாக்கியிருந்தார் ராஜமௌலி.

    பிரமிக்க வைத்த போர்க்களம்:

    பிரமிக்க வைத்த போர்க்களம்:

    போர்க்களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைப்பதாக அமைந்திருந்தது.

    காலகேயர்களின் வியூகம்:

    காலகேயர்களின் வியூகம்:

    ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயர்களின் படையை 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

    செட்டா? ரீலா?:

    செட்டா? ரீலா?:

    நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட விர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம் அசத்தியிருந்தது.

    மகிழ்ச்சிக்குரிய விருது:

    மகிழ்ச்சிக்குரிய விருது:

    ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட்டுடன் இணைந்த கலை இயக்கம் என இரண்டு தளங்களுடன் சக்கை போடு போட்ட பாகுபலிக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

    English summary
    SS Rajamouli's "Bahubali: The Beginning" (also spelt as Baahubali), starring Prabhas and Rana Daggubati, has won the Best Feature Film at the 63rd National Film Award (NFA).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X