ஆஸ்கர் விருது விழாவில் அசத்தலாக வந்த நடிகைகள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது வழங்கும் விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த நடிகைகளில் யார் யார் எல்லாம் சிறப்பாக உடை அணிந்து வந்தார்கள் என்பதை பார்ப்போம்.
2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆஃப் பைக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. விருது வழங்கும் விழாவில் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
விருதுகள் அறிவிக்கும் முன்பு சிவப்புக் கம்பளத்தில் நடிகர், நடிகைகள் நடந்து வந்தனர். அதில் சிறப்பாக உடை அணிந்து வந்த நடிகைகளைப் பார்ப்போம்.

ஹாலி பெர்ரி
ஏற்கனவே சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி கருப்பு மற்றும் வெள்ளி நிற வெர்சாச்சி கவுனில் அழகாகத் தெரிகிறார்.

கிறிஸ்டன் ஸ்டூவர்ட்
ட்வைல்ட் சீரிஸ் நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட் ரீமா ஆக்ரா ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிம்பிளாக வந்திருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்
நடிகை ஜெனிபர் லாரன்ஸ் வெள்ளை நிற டியோர் ஹூட் கொட்டோர் ஸ்ட்ராப்லெஸ் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் கிராமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாக்களுக்கும் இதே போன்ற ஆடையில் தான் வந்திருந்தார்.

ஆன் ஹாத்தவே
2013ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஆன் ஹாத்தவே பின்க் நிற சில்க் கவுன் அணிந்து அதற்கு மேட்ச்சாத வைர நெக்லஸ் அணிந்திருந்தார். பார்ப்போர் மனதை கொள்ளைக் கொள்ளும் அளவுக்கு வந்திருந்தார்.

சான்ட்ரா புல்லக்
சான்ட்ரா புல்லக் கருப்பு நிற ஜென்னி பெக்காம் கவுனில் நச்சென்று வந்திருந்தார்.

நவோமி வாட்ஸ்
நவோமி வாட்ஸ் சில்வர் நிற அர்மானி கவுனில் சிக்கென்று இருக்கிறார்.

சார்லிஸ் தெரன்
சார்லிஸ் தெரன் வெள்ளை நிற டியோர் ஹூட் கொட்டோர் கவுனில் வந்திருந்தார். எஸ்ஏஜி விருதுகள் 2013 விழாவுக்கு ஆன் ஹாத்தவே இதே போன்ற கவுன் தான் அணிந்திருந்தார்.

அமான்டா சீபிரைட்
அமான்டா சீபிரைட் அலெக்சாண்ட்ர் மெக்வீன் கவுன், லாரைன் ஸ்வார்ட்ஸ் நகைகள் அணிந்திருந்தார்.

ஜெனிபர் கார்னர்
பர்ப்பிள் பெர்ரி குச்சி கவுன் ஜெனிபர் கார்னருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அதற்கு மேட்ச்சாக அவர் நீல் லேன் வைர நெக்லஸ் அணிந்து கணவர் பென் அப்லிக்குடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரீஸ் விதர்ஸ்பூன்
கடந்த செப்டம்பர் மாதம் 3வது குழந்தையை பெற்றெடுத்த ரீஸ் விதர்ஸ்பூன் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் லூயி விட்டன் கவுனில் சிக்கென்று இருந்தார்.

ஜெனிபர் ஆனிஸ்டன்
44 வயதாகும் ஜெனிபர் ஆனிஸ்டன் சிவப்பு நிற வாலன்டினோ கவுனில் கலக்கலாக இருந்தார்.

ஜெசிகா சாஸ்டின்
அர்மானி ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்த ஜெசிகா சாஸ்டின் தலைமுடியை கொஞ்சம் கவனித்திருந்திருக்கலாம்.

ஜேன் பான்டா
75 வயதாகும் ஜேன் பான்டா மஞ்சள் நிற வெர்சாச்சி கவுனில் இளமையாகத் தெரிகிறார். இவரைப் பார்த்தால் 75 வயது மாதிரியா இருக்கு?

ஏமி ஆடம்ஸ்
ஏமி ஆடம்ஸ் ஆஸ்கர் டீ லா ரென்டா ஸ்ட்ராப்லெஸ் கவுனில் அழகாக இருந்தார்.


Click it and Unblock the Notifications











