twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாக்பூர் சர்வதேச திரைப்பட விழா-கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தா விருது

    By Shankar
    |

    Pa Vijay and Remya Nambeeshan
    சென்னை: இளைஞன் படத்துக்காக சிறந்த வசனகர்த்தா என்ற விருது முதல்வர் கருணாநிதிக்கு நாக்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து முதல்வர் கருணாநிதிக்கு நாக்பூரில் உள்ள நிர்சார் பிலிம் சொசைட்டி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

    நாக்பூரில் உள்ள நிர்சார் திரைப்படக் கழகம் சார்பில், நாக்பூரில் நடைபெறும் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் 2-வது சர்வதேச திரைப்பட விழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

    இந்த ஆண்டு, எங்கள் கழகத்தில் தமிழ் சினிமாவை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். திரைப் படத்துறையில் தமிழ் சினிமா மாபெரும் சாதனைகள் செய்து வருவதையும், புதுமையான கருத்துகளை யதார்த்தமாக வெளியிட்டு வருவதோடு, வர்த்தக ரீதியிலும், மகத்தான முறையில் தொடர்ந்து வெற்றி பெறுவதையும் நாங்கள் அறிந்தோம்.

    இளைஞனில் சிறந்த வசனம்

    நடுவர்களுடன் கூடிய எங்களது சிறப்புக் குழு, தமிழ்த்திரைப்படங்களை நன்கு கவனித்தது, கதையம்சம், படம் எடுக்கப்பட்ட விதம், வெற்றியின் அடிப்படை ஆகியவைகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் - இளைஞன் - படத்தை எங்கள் சிறப்புக் குழு தேர்வு செய்துள்ளது. இளைஞன் திரைப்படம் - கதையம்சம், வசன நடைமுறை, குறிப்பாக காலத்திற்கேற்ற சிறந்த வசனங்கள் இவைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    எனவே நாக்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உங்களது வசனத்தில் உருவானதும், 75-வது திரைப்படம் என்பதை அங்கீகரிக்கும் வகையிலும், உங்களுக்கு பாராட்டும், விருதும் வழங்க விரும்புகின்றோம். தன்னிச்சையான பொருத்தமான யதார்த்தமான உங்களது மிகச் சிறந்த வல்லமை மிக்க வசனங்களுக்காக இந்தப் பாராட்டை நாங்கள் வழங்குகின்றோம்.

    திரைத்துறையின் இதயம் கருணாநிதி

    மதம், இனம், மொழி, சாதி, சமயக்கோட்பாடு இவைகளைக் கடந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆழமாக ஈர்க்கும் வகையில் உங்கள் சீரிய எழுத்தாற்றலாலும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆணித்தரமாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு பல வகையிலும் பங்களித்து வரும் உங்களுக்கு - திரைப்படத்துறையின் இதயம் - என்ற பட்டத்தையும் தேர்வு செய்து வழங்க முடிவு செய்துள்ளோம்.

    புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் உங்களுக்கான விருதினை பெற்றுக்கொள்ள உங்களின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தால் நாங்கள் நன்றிக்குரியவர்களாவோம்.

    -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதல்வர் சார்பில் நடிகை குஷ்பு, நடிகர் பா.விஜய், இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, தயாரிப்பாளர் மார்டின் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

    English summary
    Nagpur Film Festival organisers has selected Chief Minister of Tamil Nadu M Karunanidhi as best lyric writer for his recent work in Ilaignan. The committee also decided to give him a title Heart of Cinema in the main function that held on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X