ஆஸ்கர் விழாவில் சொதப்பலோ சொதப்பல்: சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்த நடிகை

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது தவறுதலாக லா லா லேண்ட்டுக்கு அளிக்கப்பட்டு பின்னர் மூன்லைட்டுக்கு அளிக்கப்பட்டது.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார்.

விழாவின் கடைசி விருதாக சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. விருதை அறிவிக்க நடிகர் வாரன் பெட்டி மற்றும் நடிகை ஃபயி டனவே ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

வாரன்

வாரன்

வாரன் தனது கையில் இருந்த கவரை பிரித்து பார்த்தார். ஆனால் விருதை அறிவிக்காமல் அந்த கவரை நடிகையிடம் கொடுக்க அவரோ சிறந்த படம் லா லா லேண்ட் என அறிவித்தார்.

விருது

விருது

லா லா லேண்ட் குழுவிடம் விருதை கொடுத்த பிறகே அது தவறுதலாக அறிவிக்கப்பட்டது தெரிந்து விருதை வாங்கி மூன்லைட் குழுவிடம் அளித்து உங்கள் படம் தான் சிறந்த படம் என்றார்கள்.

சொதப்பல்

சிறந்த படத்திற்கான விருது மூன்லைட்டுக்கு கொடுத்தவுடன் லா லா லேண்ட் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

தவறு

தவறு

வாரனின் கையில் சிறந்த நடிகைக்காக கவரை அளித்துள்ளனர். அதை பிரித்து பார்த்த போது எம்மா ஸ்டோண், லா லா லேண்ட் என்று இருக்க அவர் குழம்பிப் போய் நடிகை ஃபயிடம் கொடுத்தார். அவரோ எம்மாவின் பெயரை பார்க்காமல் லா லா லேண்டை மட்டும் பார்த்துவிட்டு அறிவித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X