Oscars 2019- ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனைகள் படைத்த பிளாக் பாந்தர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிளாக் பாந்தர் படம் இன்று புதிய சாதனை படைத்துள்ளது.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் மார்வெல் ஸ்டுடியோஸின் பிளாக் பாந்தர் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ரூத் கார்டரும், ப்ரொடக்ஷன் டிசைனுக்கான விருதை ஹானா பீச்லர் மற்றும் ஜே ஹார்ட்டும், சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதை லுட்விக் கொரான்சனும் பெற்றுக் கொண்டனர். மார்வெல் ஸ்டுடியோஸின் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் நடிகை மற்றும் துணை நடிகை அல்லாத பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது கருப்பின பெண்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர் பீச்லர் மற்றும் ரூத் கார்டர்.
ஒரு கருப்பினத்தவரை மார்வெல் முதன்முறையாக ஹீரோவாக்கியிருக்கலாம். ஆனால் ஆடை வடிவமைப்பு மூலம் அவரை நாங்கள் ஆப்பிரிக்க மன்னராக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் ரூத் கார்டர்.


Click it and Unblock the Notifications











