ஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்
Recommended Video

டெல்லி: ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை அவரது கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர்.
தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது விழாவை புறக்கணித்தனர்.
பலருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

தேசிய விருது
மாம் இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் அவரின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.

ஜான்வி
தேசி விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அமர்ந்திருந்த போனி கபூர் மற்றும் மூத்த மகள் ஜான்வி ஆகியோர் ஸ்ரீதேவியை நினைத்து அழுதுவிட்டனர். ஜான்வி தனது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

குஷி
ஸ்ரீதேவியின் மூத்த மகள் சேலையும், இளைய மகள் குஷி பாவாடை, தாவணியும் அணிந்து வந்திருந்தனர். மும்பையில் வளர்ந்தாலும் அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி நிகழ்ச்சிக்கு உடை அணிந்திருந்தனர்.

துக்கம்
ஸ்ரீதேவியை ரொம்பவே மிஸ் செய்கிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆனால் இந்த நேரத்தில் இதை கொண்டாட ஸ்ரீ இல்லையே என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

விருது
ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை ஸ்மிருதி இரானி அல்ல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மத்திய அமைச்சர் விருது கொடுத்தது பலரையும் கோபம் அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











