கேன்ஸ் பட விழா: முதன் முறையாக 'லெஸ்பியன்' படத்துக்கு விருது
பாரீஸ்: முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் லெஸ்பியன் அதாவது ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய படமொன்று விருது பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ்' நகரில் நடைபெறும் திரைவிழாவில் கேன்ஸ்' விருது வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 'கேன்ஸ் விருதும்' ஆஸ்கார் விருதுக்கு இணையானது தான். இந்த வருடத்துக்கான கேன்ஸ் விருது வழங்கும் விழா தற்போது பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் மிக சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் அதில் திரையிடப்பட்டு வருகின்றன.

முதல் படம்...
முதன்முறையாக `லெஸ்பியன்' உறவை சித்தரிக்கும் படமான `புளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நடுவர் குழு...
ஆஸ்கார் நாயகர்களான, ஸ்டீவன் ஸ்டீல் பெர்க், நிக்கோல் கிட்மான், ஆங் லீ மற்றும் கிறிஸ்டோப் வால்ட்ஷ் உள்ளிட்ட டைரக்டர்கள் நடுவர்களாக இருந்து இப்படத்தை தேர்வு செய்துள்ளனர்.

லெஸ்பியன் காதல்...
பிரெஞ்ச் துனிசியன் இயக்குனர் அப்தெலாடிப் கெச்சிசே டைரக்டு செய்துள்ள இப்படம் ஒரு 15 வயது சிறுமி நடுத்தர வயது பெண் மீது வைத்திருக்கும் காதலை விவரிப்பதாக அமைந்துள்ளது

அற்புத நடிப்பு....
படத்தில், நடுத்தர வயது பெண்ணாக அடெல் எஸ்சார் சோ போலசும், 15 வயது சிறுமியாக லீ சிடோசும் அற்புதமாக நடித்துள்ளனர். இப்படத்துடன் கோயன் பிரதர்ஸ் டார்க் காமெடி, பிளட்ஸ் ஸ்பார்ட்டர்டு கிரிடிக் ஆப் சைனீஸ் சொசைட்டி உள்ளிட்ட பல படங்கள் கேன்ஸ் விருது போட்டியில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











