Oscars 2019- தடுக்கி விழப் பார்த்த நடிகை: கை கொடுத்து உதவிய கேப்டன் அமெரிக்கா
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் கேப்டன் அமெரிக்கா செய்த காரியம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்துள்ளது.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. 30 ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் விழா தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருது If Beale street could talk படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரெஜினாக கிங்கிற்கு கிடைத்துள்ளது. அவர் பெயரை அறிவித்ததும் மேடைக்கு செல்ல எழுந்தார்.
ரெஜினாவின் கவுன் சிக்கிக் கொண்டு தடுமாற மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த கேப்டன் அமெரிக்கா(கிறிஸ் இவான்ஸ்) ஓடி வந்து அவர் கையை பிடித்து மேடைக்கு செல்ல உதவி செய்தார்.
கேப்டன் அமெரிக்கா செய்த இந்த உதவியை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











