பெண்கள் தினத்தில் ஆஸ்கர் வென்ற கேதரின் பிக்லோ!

By Staff

Catherin Biglow
இன்று மகளிர் தினம்... இன்று பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் கேதரின் பிக்லோ.

ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கேதரின் பிக்லோதான் என்பது, மகளிர் தினமான இன்று பெண்களை சிலிர்க்க வைக்கும் விஷயமாகும்.

1951ம் ஆண்டு பிறந்த கேதரின் பிக்லோ கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். 1978ம் ஆண்டு தனது திரைப்பட வாழ்க்கையை ஒரு இயக்குநராகத் துவங்கினார். 20 நிமிட குறும்படமான தி செட் அப்-தான் இவரது முதல் படம்.

1982ம் ஆண்டு தனது முதல் முழு நீள சினிமா தி லவ்லெஸ்-ஐ உருவாக்கினார்.

1987ல் நியர் டார்க் படத்தையும், 1990ல் ப்ளூ ஸ்டீல் படத்தையும் வெளியிட்டார்.

1989ல் ஜேம்ஸ் கேமரூனை மணந்தார் பிக்லோ. இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் நட்பு தொடர்ந்தது. 1995ம் ஆண்டு கேமரூனுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கினார். பெயர்: ஸ்ட்ரேஞ்ச் டேஸ். இந்தப் படத்தின் கதை எழுதி தயாரித்தவர் கேமரூன். இயக்கம் பிக்லோ.

ஹாரிஸன் போர்டு நடித்த கே-19 படத்தை 2002ல் இயக்கினார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கியதுதான் இப்போது 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்த தி ஹர்ட் லாக்கர்.

ஈராக் போர்க் களத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தி ஹர்ட் லாக்கர். அங்கு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும், கண்ணிவெடிகளை அகற்றும் ராணுவக் குழுவினரின் அபாயகரமான வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் படம் இது.

ஜெர்மி ரென்னர், ஆன்டனி மேக்கி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் வெளியானது. பத்திரிகைகள் பாராட்டினாலும், சுமாரான கலெக்ஷனையே பெற்றது.

இப்போது 6 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ள நிலையில், படத்தை மறுவெளியீடு செய்ய தயாராகி வருகிறது அதைத் தயாரித்த வார்னர் நிறுவனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X