பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு!

கோவா: ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

பாரத்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை பார்த்திபனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்தார்.

இந்தப் படம் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

ஹவுஸ் ஓனர்

ஹவுஸ் ஓனர்

இதேபோல் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்துக்கும் மத்தியஅரசு விருது அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அம்மா கேரக்டரில்

அம்மா கேரக்டரில்

நடிகை லஷ்மி ராம கிருஷ்ணன் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார். ஏராளமான படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தும் வருகிறார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விருதுகள் கோவா திரைப்பட விழாவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து லக்ஷ்மி ராம கிருஷ்ணனுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X