twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில் ஸ்மித்திடம் வாங்கிய அறை..அடைந்த அவமானம்..ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பை மறுத்த கிரிஸ் ராக்!

    |

    கலிபோர்னியா : நடிகர் கிறிஸ் ராக் மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளராக வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளரும் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.

    இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார்.

     விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ? விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ?

    நடிகர் வில் ஸ்மித்

    நடிகர் வில் ஸ்மித்

    ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்து பேசியிருந்தார் கிறிஸ் ராக். அந்த நகைச்சுவையை கேட்ட வில் ஸ்மித், மேடை ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். வில் ஸ்மித்திடம் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்க முயன்ற கிறிஸ் ராக், தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும் என்று பேசியிருந்தார்.

    காரசார விவாதம்

    காரசார விவாதம்

    கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்த காட்சியை சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வைரலாகி ட்விட்டரில் காரசார விவாதமே தொடங்கியது. ஒரு சிலர் ஸ்மித் மனைவி மீது வைத்திருக்கும் பாசத்தை பாராட்டினாலும், சிலர் ஸ்மித்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

    20 ஆண்டு தடை

    20 ஆண்டு தடை

    இதைத் தொடர்ந்து, ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்ட வில் ஸ்மித், ஆஸ்கர் அகாடமியிடம் , எனது சக நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கண்கலங்கினார். உலகெமெங்கும் அடுத்த சில நாட்களுக்கும் இதுபற்றி தான் பேச்சாக இருந்தது. வில் ஸ்மித் செயலால் ஆஸ்கர் கமிட்டி அவரை ஆஸ்கர் விருதுகள் விழாவில் கலந்துகொள்ள 20 ஆண்டுகள் தடை விதித்தது.

    வாய்ப்பை மறுத்த கிரிஸ் ராக்

    வாய்ப்பை மறுத்த கிரிஸ் ராக்

    இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுகள் விழாவை தொகுத்து வழங்க கிறிஸ் ராக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்துள்ளார். இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், வில் ஸ்மித் தன்னைத் தாக்கிய பிறகும், ஒரு குற்றம் நடந்த இடத்திற்குத் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை என கிறிஸ் ராக் ஞாயிற்றுக்கிழமை ஃபீனிக்ஸ், அரிசோனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

    English summary
    Chris Rock has reportedly declined an offer to host next year’s Oscars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X