Oscars 2024: ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்ற கிறிஸ்டோஃபர் நோலன்.. இணையத்தில் குவியும் வாழ்த்து!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 96வது அகாடமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இதில், கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒபன்ஹெய்மர் ஏழு விருதை வென்றது. இதில் சிறந்த இயக்குநராக கிறிஸ்டோஃபர் நோலன் தேர்வானார். மெமென்டோ, தி டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டன்கிர்க், டெனெட் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய கிறிஸ்டோஃபர் நோலன் பெரும் முதல் ஆஸ்கர் விருதாகும்.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியானது. அணுகுண்டு வெடித்து சிதறும் காட்சிகள் உட்பட அனைத்தும் கிராபிக்ஸாக இல்லாமல் ஒரிஜினலாகவே படமாக்கி இருந்தார் கிறிஸ்டோபர் நோலன். இதற்காகவே இந்தப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு படையெடுத்தனர். இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா - நாகசாகி மீது அணுகுண்டை வீசிய அமெரிக்க விஞ்ஞானி தான் ஓபன்ஹெய்மர், அவரின் பயோ பிக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

96வது ஆஸ்கர் விருதுக்கு, ஒபன்ஹெய்மர், அமெரிக்கன் ஃபிக்ஷன், அனாடமி ஆஃப் எ ஃபால், பார்பி, தி ஹோல்டோவர்ஸ், கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன், மேஸ்ட்ரோ, பாஸ்ட் லைவ்ஸ், புவர் திங்ஸ், தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் ஆகிய பத்து படங்கள் சிறந்த திரைப்பட பிரிவில் இடம் பெற்று இருந்தன. இதில் ஒபன்ஹெய்மர் திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த ஓர்ஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, ஆடை வடிவமைப்பு, சிறந்த அலங்காரம், சிறந்த இசை என 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதே போல புவர் திங்ஸ் படம் 11பிரிவிலும், பார்பி 8 பிரிவிலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் 96வது அகாடமி விருது வழங்கும் விழாவில், ஒபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஓர்ஜினல் ஸ்கோர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் ஆகிய எழு பிரிவில் விருதை வென்றுள்ளது. சிறந்த இயக்குனருக்கான கிறிஸ்டோபர் நோலன் ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்மர் முதல் முறையாக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் 1970 ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். 15 ஆண்டுகால திரைப்படங்களை இயக்கி வரும் இவர், குறைந்த பட்ஜெட்டில் முதல், பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் தயாரித்துள்ளார். 7 வயதிலேயே, தனது தந்தையின் சூப்பர்8 கேமரா மூலம் குறும்படங்களை எடுக்கத் தொடங்கிய இவர், ஃபாலோயிங், மெமெண்டோ, இன்சோம்னியா, தி டார்க் நைட், தி ப்ரெஸ்டீஜ், இன்செப்சன், Interstellar, Dunkirk மற்றும் Tenet போன்ற ஹிட் படங்களை இயக்கி உலக புகழ் பெற்ற போதும் முதன் முதலாக ஓபன்ஹெய்மர் படத்திற்கு ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். இதற்கு அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட புவர் திங்ஸ் திரைப்படம் சிறந்த நடிகை , சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் என 4 ஆஸ்கர் விருதுகளை குவித்தது.




Click it and Unblock the Notifications